மீண்டும் டிரெண்ட் ஆகும் குணா குகை.. ‘மஞ்சும்மல் பாய்ஸ்‘ படம் செஞ்ச தரமான சம்பவம்.. அப்படி என்ன இருக்கு?

மலையாள சினிமா உலகிற்கு இந்த வருட ஆரம்பமே அமர்க்களம்தான். வரிசையாக ஹிட் படங்கள். மம்முட்டி நடித்த பிரேமயுகம், காபூர் நடித்த பிரேமலு, தற்போது சௌபின் ஷாகீர் உள்ளிட்டோர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்கள் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்திருக்கின்றன. தமிழில் பழைய படங்கள் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி கவனம் ஈர்த்து வரும் வேளையில் மலையாள சினிமாவோ உலகத்தரத்தினை நோக்கி ஜெட்வேகத்தில் செல்கிறது.

இதில் தற்போது கடைசியாக வெளியாகி மல்லுவுட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். அப்படி என்ன இருக்கு இந்தப் படத்தில்? ஒன்றுமில்லை. உலகநாயகன் கமல்ஹாசன் காதலுக்காக குணா படத்திற்காக கண்டுபிடித்த குகையை இவர்கள் திரில்லர் படத்திற்காக பயன்படுத்திஇருக்கின்றனர்.

தமிழில் 1991ஆம் தீபாவளி அன்று சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான குணா திரைப்படம் கமல்ஹாசனின் அற்புத நடிப்பை வெளிக்கொண்டுவந்தது. சைக்கோ மாதிரியும் இல்லாமல், சற்று லேசாக மன நலம் பாதிக்கப்பட்டவராக கமல் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். கமலுக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தில் நாம் கவனித்தது குகை. இந்த குணா குகையில் உருவான பாடல்தான் கண்மணி அன்போடு காதலன் பாடல்.

நான் ஒண்ணும் குடிச்சிட்டு கார் ஒட்டல.. எதிர்நீச்சல் நாயகி போட்ட பரபரப்பு இன்ஸ்டா பதிவு..

சரி இந்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கும், குணா குகைக்கும் இப்போது என்ன சம்பந்தம். அங்குதான்  டிவிஸ்ட்டே. கேராளவின் மஞ்சும்மல் என்ற கிராமத்திலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் 11 நண்பர்களும், அங்கு குணா குகைக்குச் செல்லும்போது அதில் மாட்டிக் கொள்ளும் ஒருவரை நண்பர்கள் எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் கதை.

படத்தின் ஆரம்பமே இசைஞானிக்கும், குணா குழுவினருக்கும் நன்றி டைட்டில் கார்டு போடுவதில் தொடங்குகிறது. மனிதர் உணர்ந்து கொள்ள இதுமனிதக் காதல் அல்ல..என்று பாடல் தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கும் படம் கொடைக்கானல் செல்வது வரை ஜாலியாகவும், அதன்பிறகு ஆடியன்ஸை சீட்டின் நுனியில் உட்கார வைத்து நகம்கடிக்க வைக்கிறது.

மனித உணர்வுகளையும், நட்பினையும் இந்தப் படம் சற்று ஆழமாகப் பேசியிருக்கிறது. குணா குகை பற்றி கமல்ஹாசன் அப்போது ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கொடைக்கானலில் இதுவரை ஷுட்டிங் எடுக்காத பகுதிகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் இயக்குநர் சந்தானபாரதியும் 7கி.மீ அலைந்தும் திருப்தியான இடம் அமையாத நிலையில் ‘இன்னும் ஒரு கிலோ மீட்டர் போய் பார்ப்போமே’ என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது.

அது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே போட்டோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே எழுநூறு அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது, என்று குணா படம் உருவான கதையை அந்தப் பேட்டியில் ஆச்சர்யம் பொங்கத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் மீண்டும் குணா குகையின் மறுபக்கத்தை நமக்கு திரில்லிங்காகக் காட்டியுள்ளது.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews