எதே குட் நைட் மணிகண்டன் அந்த நடிகையை லவ் பண்றாரா?.. அவரே வெளியிட்ட வீடியோ வைரல்!

ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட படங்களின் நடித்த பிரபலமான மணிகண்டன் அடுத்ததாக லவ்வர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில். அந்தப் படத்தை வித்தியாசமாக புரமோட் பண்ணும் விதமாக இதுதான் என் லவ்வர் என நடிகையை அவர் அறிமுகப்படுத்தும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

விஜய் டிவியில் பிரபலமான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனவர் மணிகண்டன். திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் பீட்சா 2 படத்திற்கு வசனகர்த்தாவாக நியமிக்கப்பட்டார். மேலும் அந்த படத்தில் அடையாளம் தெரியாத ஒரு கதாபாத்திரத்தில் வந்து சென்று இருப்பார்.

குட் நைட் மணிகண்டன்:

அந்த படத்தை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான், இன்று நேற்று நாளை, 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, பாவக் கதைகள், ஏலே, நெற்றிக்கண், ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் இந்த ஆண்டு வெளியான குட் நைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியதற்காக சிறந்த வசனகர்த்தா விருதையும் இவர் வென்றார்.

சினிமா படங்களை தாண்டி வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சைத்தான் எனும் தெலுங்கு வெப் சீரிஸ் மற்றும் இந்த ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றியடைந்த மத்தகம் வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

லவ்வர் படம்:

ஜெய்பீம் படத்தில் அய்யாக்கண்ணுவாக நடித்த இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பழம் எந்த ஒரு பிரிவிலும் தேர்வாகவில்லை. இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த குட் நைட் படம் மணிகண்டனுக்கு சோலோ ஹீரோ அந்தஸ்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

அடுத்ததாக லவ்வர் எனும் படத்தில் நடித்து வருகிறார். அதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா எனும் இளம் நடிகை நடித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர்களாக இருவரும் காட்சி தந்து திவ்யா என்னை காதலிக்கிறாயா என மணிகண்டன் கேட்கும் வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசர் முழுக்க தான் காதலிக்கும் பெண்ணை அசிங்க அசிங்கமாக திட்டி வருகிறார் மணிகண்டன். அனிமல் வெற்றியைத் தொடர்ந்து ஆணாதிக்க படங்கள் தமிழ் சினிமாவிலும் அதிகரிக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.