10 வயசுல நடிக்க வந்த பிரபலம்.. ஆனா நடிச்சது 13 தமிழ் படங்கள் தான்.. தென் இந்திய சினிமாவை கலக்கிய பிரபல நடிகை..

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை விதுபாலா. இவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்து புகழ் பெற்றவர். கேரளாவில் கடந்த 1954 ஆம் ஆண்டு பிறந்த விதுபாலாவின் சகோதரர் தான் பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அஞ்சலி, கமல்ஹாசனின் நம்மவர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

கேரளாவில் பிறந்தாலும் அவருடைய தந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக சிறு வயதிலிருந்து விதுபாலா தமிழ்நாட்டில் தான் வளர்ந்தார். ஈரோடு பகுதியில் அவர் தந்தை பணி செய்ததால் ஈரோட்டில் உள்ள பள்ளியில் படித்தார். சிறு வயதிலேயே அவர்  நடனம் கற்றுக்கொண்டு எட்டாவது வயதில் நாட்டிய அரங்கேற்றம் செய்தார்.

vidhubala1

இந்த நிலையில் 1964ஆம் ஆண்டு பத்தாவது வயதில் ’ஸ்கூல் மாஸ்டர்’ என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விதுபாலா, 1971 ஆம் ஆண்டு டாக்ஸி கார் என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் பிரபலமான ஹீரோக்களுடன் அவர் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில் தான் தமிழிலும் சில படங்கள் அவர் நடித்தார். தமிழில் அவர் ’ஆயிரம் ஜென்மங்கள்’ உள்பட சில படங்களிலும் நடித்தாலும் அவருக்கு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான வெள்ளி விழா என்ற திரைப்படம் தான் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.

இதனையடுத்து பொண்ணுக்கு தங்க மனசு, எங்கம்மா சபதம், முருகன் காட்டிய வழி, எனக்கு ஒரு மகன் பிறப்பான், சமர்ப்பணம், கஸ்தூரி விஜயம், ராசி நல்ல ராசி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனை அடுத்து ஜெயலலிதா நடித்த உன்னை சுற்றி உலகம் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.  ஜெய்சங்கர் நடிப்பில் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான ஒரே வானம் ஒரே பூமி என்ற திரைப்படம் தான் தமிழில் இவர் நடித்த கடைசி திரைப்படம்.

விதுபாலா பிரபல தயாரிப்பாளர் முரளி குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அர்ஜூன் என்ற மகன் பிறந்தார். திருமணம்  மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்னர் அவர் முழுவதுமாக திரையுலகில் இருந்து விலகினார். அதன்பின்னர் அவர் சில ஆண்டுகள் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தினார். பல மலையாள சின்னத்திரை சீரியல்களில் அவர் நடித்துள்ளதுடன் சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

vidhubala

தமிழில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி போல் மலையாளத்தில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இவர் கிட்டதட்ட 10 ஆண்டுகள் நடத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 13 படங்கள் மட்டுமே நடித்தார் விதுபாலா. தமிழில் மிக குறைந்த படங்களில் அவர் நடித்தாலும் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார்.

தற்போது  71 வயதில் இருக்கும் விதுபாலா இன்னும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நீடூடி வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துவோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.