இவ்ளோ மோசமாவா நடந்துப்பாங்க.. நடத்தையே சரியில்ல.. நடிகை மாளவிகா மோகனனை கடுப்பாக்கிய சம்பவம்

பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் KU மோகனனின் மகள் ஆவார். இதனைத் தொடர்ந்து ஒரு சில கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த மாளவிகா, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாளவிகாவுக்கு தமிழ் சினிமா மிக அசத்தலான வரவேற்பையும் கொடுத்திருந்தது. அதே போல, அடுத்த தமிழ் படத்திலேயே நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருந்தது.

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயாகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் மாறன், மலையாளத்தில் மேத்யூ தாமஸுடன் கிறிஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மாளவிகாவின் அடுத்த படத்திற்கு ஏராளமானோர் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்து வருகின்றனர்.

KGF ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தது பற்றி மிகவும் தத்ரூபமாக ப. ரஞ்சித் இயக்கி வரும் படம் தான் தங்கலான். சீயான் விக்ரம், பசுபதி, பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இருந்த நிலையில், அனைவருமே இதுவரை இல்லாத கதாபாத்திரத்திலும், கெட்டப்பிலும் உள்ளனர்.

விக்ரமுக்கு மட்டுமில்லாமல் மாளவிகா மோகனனின் திரை பயணத்திலும் தங்கலான் திரைப்படம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் திரைப்படங்களில் பிசியாக இயங்கி வரும் மாளவிகா மோகனன், அதிகம் வைரல் ஆவது தனது சமூக வலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலம் தான். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டே இருப்பார்.

அதே போல எக்ஸ் தளத்திலும் தனது ரசிகர்கள் கேள்விக்கு அவ்வப்போது பதிலளிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். இந்த நிலையில், மிகவும் கோபத்துடன் மாளவிகா பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவு, தற்போது ரசிகர்கள் வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் மாளவிகா மோகனன் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

தான் மேற்கொண்ட பயணத்தில் நடந்த சம்பவம் பற்றி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மாளவிகா, “மிகவும் மரியாதை இல்லாத மற்றும் மோசமான சேவை. பணியாளர்களின் நடத்தையும் சரியில்லை” என அந்த தனியார் விமான நிறுவனத்தை குறிப்பிட்டு ஒரு பதிவை மிகவும் எரிச்சலுடன் மாளவிகா மோகனன் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.