சிபில் மதிப்பெண்ணை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

சிபில் (CIBIL) ஸ்கோர் என்றால் என்ன என்பது வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு  மட்டுமே அதிகம் தெரிய வாய்ப்புள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் ஒரு தனி மனிதன் கடன் வாங்க வேண்டுமென்றால் அவருடைய கடன், வரவு, இருப்பு விபரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு வங்கியில் கடன் வாங்கினால் மற்றோரு வங்கிக்கு எங்கே தெரியப்போகிறது என்று நீங்கள் நினைத்து விடாதிர்கள்.

சிபில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை ஒன்றாக இணைக்கிறது. இதன் மூலம் எங்கு கடன் வாங்கி செலுத்தாமல் இருந்தாலும் அது உங்கள் மதிப்பெண்ணை குறைக்கும். இந்த விபரம் அனைத்து வங்கிகளுக்கும் எதிளில் கிடைக்குமாறு அமைக்கப்பட்ட எளிய வழியே இந்த சிபில். இந்த ஸ்கோரை அடிப்படையாக வைத்துதான் அடுத்தடுத்த கடன் வாங்க முடியும். கடனை சரியாக திரும்ப செலுத்தவில்லை எனில் கடனை கட்ட தவறியவர் பட்டியலில் உங்களின் பெயர் சேர்ந்துவிடும். அடுத்து கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

இந்த மாதிரியான சூழ்நிலைகளைத் தவிர்க்க ஒரு முறைக்கு பல தடவை கடன் வாங்குவது அவசியமா என்று நன்று யோசித்து வாங்குவது சிறந்தது.  வருமானத்திற்கு மிஞ்சிய கடன் வாங்கும் போது அதனை கட்ட முடியாமல் உங்கள் சிபில் மதிப்பெண் குறைந்து விடும். அதன் பிறகு எதிர்காலத்தில் கடன் வாங்குவது என்பது எளிதாக அமையாது.

எந்த பண விசயமாக இருந்தாலும் அதற்கு தக்க ஆதாரம் கையில் வைத்திருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அது உங்களை காப்பாற்றும் என்பதை மறந்து விடாதிர்கள். தவறுதலாக உங்கள் சிபில் மதிப்பெண் குறைக்கப்பட்டிருந்தால் தனிப்பட்ட முறையில் முறையீடு செய்யும் வசதியும் உள்ளது என்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை.

 

Published by
Staff

Recent Posts