சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழிப்பது ஏன் தெரியுமா? சுவாரசியமான வேடன் கதை..!

ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுவது மகாசிவராத்திரி.

சிவராத்திரி என்றால் சிவனுக்குப் பிரியமான ராத்திரி. சிவன் என்றால் மங்களம், இன்பம் என்றும் சொல்லலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதி அன்று சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கிய நாளை மகாசிவராத்தியாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

Umadevi Pooja
Umadevi Pooja

பிரளய காலத்தின்போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

4 ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை சிவராத்திரி இன்றே கொண்டாடப்பட வேண்டும் என்றாள்.

மகாசிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவன் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களும் தர வேண்டும். முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள்புரியுங்கள் என்று உமாதேவி பரமேஸ்வரனிடம் வேண்டிக்கொண்டாள்.

சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார். அந்த இரவே மகாசிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

ஒரு அடர்ந்த காட்டில் சுஷ்மரா என்ற வேடன் வாழ்ந்து வந்தான். அவன் கொடியவனாகவும், நெறி தவறியவனாகவும் வாழ்ந்து வந்தான். சிவராத்திரி பற்றி ஏதும் அறியாதவன். ஒரு சிவராத்திரி அன்று அவனது பிள்ளைகள் பசியால் வாடிக்கொண்டிருந்தன. அப்போது சுவாமி நம் பிள்ளைகள் பசி தீர்க்க சிறிது உணவு கொண்டு வாருங்கள் என்று அவனது மனைவி கேட்டுக்கொண்டாள்.

சுஷ்மரா காட்டுக்குச் சென்று வேட்டையாடச் சென்றான். காட்டில் மானைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தான்.

ஒரு மானைக்கூட காணவில்லை. ஒரு இடத்தில் நீர்த்தேக்கம் இருப்பதைப் பார்த்து இதுதான் சரியான இடம்… எப்படியும் நீரைத் தேடி மான் வந்து இங்கு பருக வரும் என்று அதன் அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி இருந்தான்.

நாம் நினைத்தபடி மான் வந்து விட்டது. அவன் வேட்டையாடத் தயாரானான். அப்போது அம்பு வில்வ மரத்தில் பட்டு ஒவ்வொரு இலைகளாக விழத் தயாரானது.

மரத்தின் கீழே சிவலிங்கம் இருந்ததை சுஷ்மா அறியவில்லை. வில்வ இலைகளும், அவன் குடிப்பதற்காகக் குவளையில் வைத்திருந்த நீரும் சிறிது சிறிதாக கீழே உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

வேடன் அம்பு எய்தப் போவதைக் கவனித்த மான், சற்று பொறுங்கள். நான் என் குடும்பத்தைக் கவனித்துவிட்டு வருகிறேன். அதற்கு வேடன் நான் உன்னை எப்படி நம்புவது என்று கேட்டான். அப்போது மான் நான் நிச்சயமாக வருகிறேன் என்று சொன்னது. சரி. சென்று வா. நான் உனக்காகக் காத்திருக்கிறேன் என்றான். சிறிது நேரம் கழித்து மற்றொரு மான் வந்தது. அம்பை எய்தத் தயாராக இருந்த போது அங்கிருந்த அம்பு பட்டு மீண்டும் சிவலிங்கத்தின் மேல் வில்வ இலைகள் பட்டது.

அப்போது மான் முதலில் சொன்ன மானைப் போலவே டயலாக் சொன்னது. இப்படியே அதன்பிறகு வந்த ஒவ்வொரு மானும் சொல்ல, கடவுளே என் குடும்பத்தை நான் எப்படிக் காப்பாற்றுவேன். என் பிள்ளைகள் பசியால் அவதிப்படுகிறார்களே என்றான்.

Lord Shiva
Lord Shiva

அதன்பிறகு குடும்பத்தைக் கவனிக்கச் சென்ற மான்கள் எல்லாம் வந்தன. அப்போது ஒரு மான் வேடனே என்னைக் கொன்றுவிடு. என் கணவரையும், என் பிள்ளைகளையும் விட்டு விடு. என் கணவர் இல்லாமல் நான் வாழ முடியாது என்றது. இப்படியே அனைத்து மான்களும் சொல்ல, குட்டிகளும் பெற்றோர்கள் இல்லாமல் வாழ முடியாது. எங்களையும் கொன்று விடுங்கள் என்றன.

சுஷ்மராவ் மான்களின் பாசத்தைக் கண்டு வியந்தான். மரத்தில் இருந்து இறங்கினான். அப்போதும் வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீது பட்டன. வேடன் மான்களை விட்டுவிட்டான். அப்போது சிவன் தோன்றி, இன்று முதல் நீ குகன் என்று அழைக்கப்படுவாய். ராமனால் ஆசீர்வதிக்கப்பட்டு, குகனாய் திகழ்வாய் என்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.