சிவராத்திரியில் முக்கியமான நேரம் எது தெரியுமா? இதைக் கண்டிப்பா செய்யுங்க…

இன்று ஆன்மிக அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த நன்னாள் மகாசிவராத்திரி. இன்று இரவு எங்கெங்கும் சிவாலயங்களில் எல்லாம் விழாக்கோலம் பூணும். பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். நாட்டியம், நடனம், இசைக்கச்சேரி, சொற்பொழிவு என பக்தி மணம் கமழும்.

சிலர் இன்று இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டுமே என விடிய விடிய டிவியைப் போட்டுப் படம் பார்ப்பார்கள். அப்படி எல்லாம் நம்மை வற்புறுத்தி கண் விழிக்கக்கூடாது. அப்படி என்றால் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது என்று பார்ப்போமா…

சிவராத்திரி இன்று (8.3.2024 – வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம்
செய்ய வேண்டியது இதுதான். இன்று இரவு தூங்கக்கூடாது. மறுநாள் பகலிலும் தூங்கி விடக்கூடாது. மறுநாள் மாலை 6 மணிக்கு மேல் தான் தூங்க வேண்டும். சிவராத்திரி அன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.

இன்று காலை முதல் மறுநாள் காலை 9 மணி வரை விரதம் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். இரவில் கண் விழிப்பதற்காக பொழுது போக்கு விஷயங்களைப் பார்த்து கஷ்டப்பட்டுக் கண் விழிக்கக்கூடாது. இறை சிந்தனையுடன் தான் இரவு முழுவதும் இருக்க வேண்டும்.

Shiva Pooja
Shiva Pooja

சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் பண்ண வேண்டும். பக்கத்தில் உள்ள கோவில்களுக்குப் போய் அபிஷேகம் செய்ய அரை லிட்டர் பாலாவது வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்யலாம். ஒரே ஒரு வில்வ இதழை வைத்தாவது அர்ச்சனை பண்ண வேண்டும். இது கட்டாயம். இன்று இரவு சிவனின் நாமத்தைத் திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.

சிவாய நம, நமசிவாய என ஏதாவது ஒன்றை சொல்லலாம். தேவாரம், திருவாசகம் சொல்லலாம். லிங்கோத்பவ காலம்… இது தான் 3ம் கால பூஜை. 11.45 மணி முதல் 12.15 மணி வரை உள்ள அந்தக் காலத்தில் தியானம் கண்டிப்பாக செய்ய வேண்டும். இந்த நாலையும் செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருள் கண்டிப்பாகக் கிடைக்கும்.

சிவபெருமானிடம் உள்ளன்போடு ஆத்மார்த்தமா அவரைத் தவிர வேறு எதையும் வேண்டாது உன் அன்புக்கு நான் பாத்திரமாக வேண்டும், உனக்கு விருப்பமான விஷயங்களை நான் செய்கிறேன்… அப்படின்னு உண்மையாகவும் பக்தியாகவும் விரதம் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் சிவபெருமானுக்குப் பிடித்தவர்களாக, சிவபெருமானே விரும்பக்கூடிய அடியாராக நாம் இருப்போம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.