மகரம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

மகர ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 2 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். ராகு பகவான் 3 ஆம் இடத்தில் உள்ளார். குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு வரவுள்ளார்.

ஜென்ம சனி விலகும் காலகட்டம். இந்த காலகட்டத்தினை நீங்கள் தவறவிட்டால் பின்னர் அதற்காக வருத்தம் கொள்வீர்கள். வாக்குக்கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் தலை முதல் கழுத்து வரையிலான உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்படும்.

பெற்றோர், பெரியோர் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேற்று மொழி மனிதர்களால் அதிக அளவில் ஆதாயம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப் பெறும். குரு பெயர்ச்சிக்குப் பின் வயிறு சார்ந்த தொந்தரவுகள் ஏற்படும்.

லாபம் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக சனி பெயர்ச்சி காலம் இருக்கும். வீடு வாங்குதல், அசையும் அசையாச் சொத்துகளில் முதலீடு செய்தல் என நீங்கள் பரபரப்பாக இருப்பீர்கள்.

உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும், வண்டி, வாகனங்களில் மாற்றம் செய்வீர்கள். தொழில்ரீதியாக புதுத் தொழில் துவங்குதல், தொழிலை அபிவிருத்தி செய்தல், கூட்டுத் தொழிலில் இருந்து தனித் தொழில் செய்தல் என பல மாற்றங்களையும் செய்வீர்கள்.

வார்த்தைகளில் கவனம் தேவை. ஏழரை சனி உங்கள் ஸ்தானத்துக்கு அதிபதி. பொருளாதாரரீதியாக சிறப்பான காலகட்டமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ஆனால் வரும் வரவுக்கேற்ற அளவில் செலவு மற்றொருபுறம் இருக்கவும் செய்யும். அதனால் பணத்தினை ஆதாயம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்யுங்கள்; இல்லையேல் வீண், விரயச் செலவுகள் ஏற்பட்டுவிடும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தள்ளிப் போன திருமண காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும். உடன் பிறப்புகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.