ஒரே பாடலுக்காக மூன்று முறை சம்பளம் வாங்கிய கவிஞர்.. பக்தி மணம் கமழும் இந்தப் பாடல்தானா அது?

கவிஞர்கள் தாங்கள் இயற்றிக் கொடுக்கும் பாடல்களுக்கு தயாரிப்பாளரிடமிருது ஒருமுறை சம்பளம் வாங்குவார்கள். பாடல் ஹிட் ஆனால் இதர ஊக்கத்தொகையோ அல்லது பரிசுகள் கொடுப்பதோ வழக்கம். ஆனால் கவிஞர் ஒருவர் தான் இயற்றிய ஒரு பாடலுக்காக மூன்றுமுறை சம்பளம் பெற்றுள்ளார். மேலும் அந்தப் பாடல் இன்றுவரை கோவில்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அப்படி மூன்றுமுறை சம்பளம் வாங்கிய கவிஞர் பூவை செங்குட்டுவன். அந்தப் பாடல் எதுவெனில் கந்தன் கருணை படத்தில் இடம்பெற்ற ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்..‘ என்ற பாடல்தான் அது.

சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கண்ணதாசன் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அங்கு இறைவணக்க பாடல் ஒலிக்கிறது. சூரமங்கலம் சகோதரிகள் குரலில் ‘’திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’’ என்ற பாடல் ஒலிக்க கண்ணதாசன், ஏ.பி.நாகரஜன், தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் ஆகிய மூவருமே நெகிழ்ந்து போய் இருக்கின்றனர்.

பின் ஏ.பி.நாகராஜன், இந்த மாதிரி நீங்கள் ஒரு பாடலை எழுதலாமே என்று சொல்ல, இது மாதிரி என்ன இந்த பாடலையே பயன்படுத்திக்கொள்ளலாமே என்று கண்ணதாசன் கூறியுள்ளார். மேலும் நான் எழுதி இருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா என்று தெரியாது. அந்த அளவிற்கு பாடல் சிறப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.

அரசியல்ல பரம எதிரி.. தொழில்ல செம போட்டி.. ஆனாலும் இணைபிரியாத இரு ஆளுமைகள்

இந்த பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்று சொல்ல, அவருக்கு கண்ணதாசன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த பாடலை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சென்னையில கந்த கோட்டம் உண்டு என்ற வரிக்கு பதிலாக சிறப்புடனே கந்த கோட்டம் உண்டு என்று மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதன்படி இந்த வரிகள் மாற்றி பாடல், படத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த பாடலுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். அப்போது சினிமாவில் குன்னக்குடி பிரபலம் இல்லாத சமயம். முருகனின் பக்தி பாடல்கள் தொகுப்பை வெளியிட விரும்பிய கண்ணதாசன், அதை சூரமங்கலம் சகோதரிகளை வைத்து பாட வைக்கவும், இதற்கு பூவை செங்குட்டுவனை பாடல் எழுதவும் அழைக்கிறார். ஆனால் பூவை செங்குட்டுவன் இந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.

அப்போது அவர் திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணாவுடன் பயணித்துக் கொண்டிருந்ததால், இந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார். ஆனாலும் கண்ணதாசன் தரப்பு தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டு பாடல் எழுதியுள்ளார். இந்த பாடல் முருக காணம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெறுகிறது. அதன்பிறகு இந்த பாடலை நாடகத்திற்கு கொடுக்கிறார்கள். இதன் மூலம் இந்த ஒரு பாடலுக்காக பூவை செங்குட்டுவன் 3 சம்பளம் வாங்கியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews