எல்.பி ரெக்கார்ட் கிராமஃபோன் ப்ளேயர்களில் பாடல் கேட்ட சுகம்

5000 பாடலை தம்மாத்துண்டு பென் டிரைவில் பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காரிலேயே ஆடியோ ப்ளேயர் ஸ்லாட்டில் மாட்டி நான் ஸ்டாப்பாக பாட்டு கேட்டு கொண்டு செல்லும் காலம் இது.

2a61c6689c8711bd8fe5acb1ee97f353

ஆனால் அந்தக்காலத்தில் 90களின் நடுப்பகுதி வரை எல்.பி ரெக்கார்டில் பாட்டு கேட்டது ஒரு தனி ரகம் அதற்கு ஈடு எதுவும் இல்லை என்பது இசை ரசிகர்களின் கருத்து.

கிராமஃபோன் ரெக்கார்டுகள் என அழைக்கப்பட்ட இந்த ரெக்கார்டுகள் மிக துல்லிய தரத்துடன் பாடலை டிஜிட்டல் யுகம் அல்லாத அந்த நேரங்களிலேயே கொடுத்தது.

இன்ரிகோ,எக்கோ உள்ளிட்ட கம்பெனிகள் இது போல இசைத்தட்டுகள் விற்பதில் அந்த காலங்களில் முன்னணி வகித்தது.

இப்படத்தின் பாடல்களை எக்கோ இசைத்தட்டுகளில் கேட்டு மகிழுங்கள் என்று இளையராஜா இசையமைத்த படங்களில் டைட்டிலில் பெரும்பாலும் வந்து விடும் அதை பார்த்தாலே நமக்கு ஒரு மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்.

டிஜிட்டல் யுகத்திலும் பழைய எல்.பி ரெக்கார்டுகளை தேடி அலையும் இசை வெறி பிடித்த ரசிகர்கள் பலர் உள்ளனர். 1994ல் வந்த ஜெண்டில்மேன் படத்துக்கு பிறகு இந்த ரிக்கார்டுகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 2000ம் ஆண்டு வரை ஆடியோ கேசட் மற்றும் டேப்ரெக்கார்டர் பயன்பாட்டில் இருந்ததால் ரிக்கார்டிங் சென் டர் வைத்திருந்தவர்கள் எல்.பி ரெக்கார்டில் இருந்து கேசட்டில் பாடல் பதிவு செய்து கொடுத்து வியாபாரம் பார்த்து வந்தனர்.

அடுத்த நிலையாக சிடியில் பாடல்கள் வர

இந்த ரிக்கார்டுகளை பல இசை ரசிகர்கள் சுத்தமாக கை விட்டு விட்டனர். இந்த கிராமஃபோன் ப்ளேயர்கள் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் செய்ய ஆட்கள் இல்லாத நிலையில் அடுத்த டிஜிட்டல் நிலைக்கு தாவ இந்த டிஜிட்டல் ரிக்கார்டுகள் மூட்டை மூட்டையாக கட்டப்பட்டு குப்பை தொட்டியில் வீசப்பட்டது.

சில பெருநகரங்களில் 10 ரூபாய்க்கு ப்ளாட்பார்ம்களில் இவை கூவி கூவி விற்கப்பட்டிருக்கிறது.

காலப்போக்கில் நவீன அசுர வளர்ச்சியில் சிடி, டிவிடி, பென் டிரைவ், ஐபாட், மொபைல் போன் போன்றவற்றில் பாடல் கேட்டு கேட்டு சலித்து போன பல இசை ரசிகர்கள் இந்த எல்.பி ரெக்கார்டுகள் மற்றும் ப்ளேயர்களை தேட,இவர்களின் தேவை அறிந்து நவீன வடிவில் சில நிறுவனங்கள் கொஞ்சம் இந்த பழைய கிராமஃபோன் ப்ளேயர்களை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சிறிது மாற்றங்கள் செய்து விற்று வருகிறது.

கோவை போன்ற பெருநகரங்களில் சில இடங்களில் இந்த ப்ளேயர்கள் ப்ளாட்பாரங்களில் விற்கப்படுகிறது. இந்த எல்.பி ரெக்கார்டுகள் வைத்திருக்கும் சில நபர்களும் ஆன்லைனில் செகண்ட் சேல்ஸ் ஆக விற்கின்றனர். ஆனால் விலைதான் அதிகமாக இருக்கிறது.

பார்த்துக்கொள்ளுங்கள், குப்பையில் கொட்டப்பட்ட, பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த ரிக்கார்டுகள், பாரம்பரியத்துக்காகவும் பண்பாட்டுக்காகவும் ,கெளரவத்துக்காகவும் மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. வரவேற்பறையை அலங்கரிக்கின்றன.

பழசு என்றாலே அதற்கு ஒரு தனி அங்கீகாரம் என்றைக்கு இருந்தாலும் கிடைக்கத்தான் செய்யும் என்பதை இது போல சம்பவங்கள் உணர்த்துகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews