நீ பெரிய நடிகனா வரணும்.. ரஜினியின் வெற்றிக்கு பின்னால் இருந்த காதலி.. ஒரே ஒரு காரணத்தினால் பிரிந்த சோகம்..

ஒருவரது வாழ்க்கை எந்த நேரத்தில் எந்த வகையில் மாறும் என்பது யாருக்கும் நிச்சயம் தெரியாது. தான் ஒரு பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கும் போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெறுவதுடன் மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அந்த சம்பவம் அமையும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்திய சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை நிச்சயம் கை காட்டலாம்.

ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த், நடிப்பிற்காக முயற்சி செய்து வந்த நிலையில் தான் இயக்குனர் பாலசந்தர் பார்வையில் பட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றையே ரஜினிகாந்த் என்ற நடிகர் மாற்றி எழுதியிருந்தார். அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சுமார் 48 ஆண்டுகளான நிலையில் இன்றுவரையிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு இந்தியாவில் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு தனி ஒரு சாம்ராஜ்யத்தையே ரஜினி நடத்தி வருகிறார்.

73 வயதான போதிலும் இன்னும் புதுமுக நடிகர் பலர் வந்து கொண்டே இருந்த போதிலும் ரஜினியின் அரியாசனத்தை நெருங்குவது கடினமாக தான் உள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் வரலாற்றை கூட ரஜினிக்கு முன், ரஜினிக்கு பின் என பிரித்து விடலாம். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகில் ரஜினியின் தாக்கம் என்பது மிகப்பெரிது.

இந்தியா மட்டுமில்லாமல் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் ரஜினிக்கென்று பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் ஏராளமாக உள்ளது. ஒரு நாள் பஸ் கண்டக்டராக இருந்து இன்று உலக அளவில் மிக முக்கியமான நடிகராக மாறி இருக்கும் ரஜினிகாந்தின் பின்னால் ஒரு காதலி இருந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. அந்த காதலி பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

பெங்களூரில் நடிகர் ரஜினி நடத்துனராக பணிபுரிந்து வந்த போது நிர்மலா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அந்தப் பெண் தினமும் ரஜினிகாந்த் கண்டக்டராக வேலை செய்யும் பேருந்தில் ஏறி வந்ததால், இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே காதலும் பின்னாளில் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண் ஒரு மருத்துவர் என தகவல் தெரிவிக்கும் நிலையில், தான் நடித்த நாடகம் ஒன்றை பார்ப்பதற்காக நிர்மலாவை வரச் சொல்லி இருந்தார் ரஜினி. அதில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போயுள்ளார் காதலி நிர்மலா. அது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு தெரியாமல் சென்னையில் உள்ள ஒரு நடிப்புக் கல்லூரியில் அவருக்காக அட்மிஷன் போட்டதுடன் அதற்கான பணத்தையும் கையில் கொடுத்து ரஜினியை சென்னைக்கும் போய் சாதிக்கவும் அனுப்பி வைத்துள்ளார் அந்த பெண்.

இதனைத் தொடர்ந்து, திரைப்படக் கல்லூரியில் ரஜினி படித்து வந்தபோது மாதா மாதம் அவரது செலவுக்கு ராஜ் பகதூர் என்ற நண்பர் பணம் கொடுத்து உதவி உள்ளார். இதன் பின்னர் பாலச்சந்தரின் அறிமுகம் ரஜினிக்கு கிடைக்க, பின்னர் முன்னணி நடிகராக மாறி இன்று இந்தியாவை ஆளும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இந்த காதல் கை கூடாமல் போனதற்கு மிக முக்கிய காரணம், சில குடும்ப சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக வேறு ஒருவரை நிர்மலா என்ற அந்த ரஜினியின் காதலி திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினி சூப்பர்ஸ்டாராக மாறியதன் பின்னால் இப்படி ஒரு காதல் கதை இருப்பது பலருக்கும் தெரியாத தகவல் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...