கமலின் இந்த இரண்டு திரைப்படங்களை 250 முறை பார்த்த லோகேஷ்.. என்ன திரைப்படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சில இயக்குனர்களும் பிரபலத்தின் உச்சியை அடைந்து மக்கள் மனதை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இதுவரை ஐந்து திரைப்படங்களை மட்டுமே இயக்கிய லோகேஷ் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற ரகசியத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சாதாரண வங்கி ஊழியர் ஆக இருந்த லோகேஷ் திரைப்படங்கள் இயக்குவதில் இருந்த ஆர்வத்தினால் தொடக்க காலங்களில் ஷார்ட் பிலிம்களை எடுத்து வெளியிட்டு வந்துள்ளார். அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஏற்பட்டுள்ளது.

அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதலில் வெளிவந்த திரைப்படம் மாநகரம். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு மாநகரம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஶ்ரீ , சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா, சார்லி என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.

தனது இரண்டாவது திரைப்படத்திற்கு லோகேஷ் வாங்கிய சம்பளம் 30 லட்சம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் அவர்களை சந்தித்து கதை கூறும் வாய்ப்பு கிடைத்ததால் மாஸ்டர் படம் அவருக்கு உறுதி செய்யப்பட்டது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜிக்கு மிகவும் பிடித்த நடிகரான கமல்ஹாசன் உடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து லோகேஷை பிரம்மாண்ட இயக்குனர்களின் பட்டியலில் சேர்த்தது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி மீண்டும் லோகேஷிற்கு ஒரு ஹைப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்த பிரமாண்ட வெற்றிகளை கொடுத்து மக்களை மகிழ்ச்சிக்கு உட்படுத்தும் லோகேஷ் தனது சினிமாவின் குருவாக நடிகர் கமல்ஹாசன் அவர்களை கூறுவதை பல மேடைகளில் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி குருவாக மதிக்கும் கமல்ஹாசன் நடித்த சில திரைப்படங்களை லோகேஷ் அவர்கள் பல முறை பார்த்துள்ளதாக அவரே பல மேடைகளில் கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா திரைப்படம் லோகேஷுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாகும். அதற்கு அடுத்ததாக கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படமும் லோகேஷ் மனதை கவர்ந்த படங்களில் ஒன்று. இந்த இரண்டு படங்களையும் லோகேஷ் பலமுறை, அதாவது 250 முறைக்கு மேல் பார்த்து தான் சினிமாவில் இறங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்ததாக அவர் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews