நண்பனின் படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்!! பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!!

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். 5 படங்களை இயக்கி டாப் இயக்குனர் வரிசையில் சேர்ந்த பின் ஜிஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதில் தயாரித்து முதலில் வெளியாகும் ஒரு சில படங்கள் என்னுடைய நண்பர்கள், உதவி இயக்குனர்களின் படங்களாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று அவரது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், உறியடி இயக்குனர் மற்றும் நடிகரான விஜய் குமாரின் அடுத்த படத்தை தயாரிக்க போவதாக, கூறியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் குமார் நீண்ட காலமாக நண்பர்களாக பயணித்துள்ளனர். மாநகரம் படத்திற்கு முன்பே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளார்கள்.

மாநகரம் படத்திற்கு பிறகு ஸ்ரீ மற்றும் விஜய் குமாரை வைத்து ஒரு படம் எடுக்க ஆலோசித்து வந்ததாக லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கூறி இருந்தார். ஆனால், அந்த படம் எடுக்க முடியாமல் போய் உள்ளது. தொடர்ந்து கைதி, விக்ரம் என முன்னணி ஹீரோக்கள் படங்களை இயக்க தொடங்கிவிட்டார் லோகேஷ்.

ஆனால், விஜய் குமார் உறியடி 2 படத்திற்கு பிறகு எங்கு போனார் என்று அவரது படத்தால், ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இப்போது விஜய் குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த விஜய் குமார் சினிமா மீதிருந்த ஈர்ப்பால், அந்த வேலையை விட்டு விட்டு இயக்குனராக களமிறங்கி இருக்கிறார்.

சொந்த செலவிலேயே உறியடி படத்தை தயாரித்து இயக்கினார். பரந்த சிந்தனை கொண்ட , மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லவேண்டும் என்ற எண்ணம் விஜய் குமாருக்கு உண்டு. நண்பராக மட்டும் இருந்துவிடாமல், அவருடைய அடுத்த படத்த இயக்க உதவி செய்ய முடிவு செய்தது நல்ல விஷயம் ஆகும் . லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் குமார் இணையும் படம் எப்படி இருக்குமென்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...