லோகேஷ் கழுத்தில் இருக்கும் கருங்காலி மாலையின் ரகசியம்.. நம்பிக்கையை தாண்டி போடுறதுக்கான காரணமே இதான்..

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் சிறந்த முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் தான் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜுக்கு மாநகரம் என்னும் திரைப்படம் இயக்குனர் அந்தஸ்தை கொடுத்திருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் அவரது திரைக்கதை திறனுக்கும் வெகுவாக பாராட்டுக்கள் கிடைத்திருந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் இரண்டாவது படத்தில் கார்த்தியை இயக்கும் வாய்ப்பு கைதி படத்தின் மூலம் கிடைக்க இதற்கு அடுத்தபடியாக விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம், மீண்டும் விஜயுடன் லியோ என வரிசையாக மிகப்பெரிய நடிகர்களுடன் தான் படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ். அதிலும் அனைத்து படங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் எல்சியூ யுனிவர்ஸ் என்ற சம்பவமும் லோகேஷை இந்திய அளவில் திரும்பிப் பார்க்கவும் வைத்திருந்தது.

தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ள லோகேஷ் கனகராஜ் இதன் படப்பிடிப்பை இன்னும் சில மாதங்களில் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தான் லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை அணிவது பற்றிய ரகசியமும் தற்போது தெரிய வந்துள்ளது.

இது பற்றி சமீபத்தில் நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்த கருத்தின் படி, ஒரு நாள் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி சென்ற வழியில் லோகேஷ் சென்ற வாகனம் விபத்து ஒன்றில் சிக்கியதாக தெரிகிறது. ஆனால் பெரிதாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் லோகேஷின் அனைத்து திரைப்படங்களிலும் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ள சதீஷ் குமார் என்பவர் கருங்காலி மாலை ஒன்றை யோகேஷ் கையில் கொடுத்துவிட்டு இதனை அணிந்து கொண்டால் நெகட்டிவிட்டி ஏதும் பக்கத்தில் வராது என நம்பிக்கையுடன் கொடுத்துள்ளார்.

அதன் பெயரே என்னவென்று தெரியாமல் தான் அந்த சமயத்தில் லோகேஷ் கழுத்தில் வாங்கி போட்டுக் கொண்டது மட்டும் இல்லாமல் தன் மீது பாசத்துடன் சகோதரர் தரும் எண்ணத்தில் அதனை கழற்றாமல் கழுத்தில் போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பார்த்து பலரும் கருங்காலி மாலை கழுத்தில் போட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான உண்மையான காரணமும் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...