எந்த டைரக்டருக்கும் கிடைக்காத வரவேற்பு.! ஹீரோக்களை மிஞ்சிய Loki.!!

தற்போது தமிழ் சினிமாவை மீண்டும் காப்பாற்றியவர் ஆக காணப்படுகிறார் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஏனென்றால் கடந்த மூன்று, நான்கு மாதங்களாக தமிழ் சினிமாவில் வந்த அனைத்து படங்களும் தோல்வியைத் தழுவிக் கொண்டு வந்தது.

annatha song nayan scaled

அதுவும் குறிப்பாக சூப்பர் ஸ்டார், தளபதி, தல அஜித் இப்படி பலரின் படங்களும் வரிசையாக தோல்வியடைந்ததால் தமிழ் சினிமாவில் வேறு யாரும் இல்லையா என்று கேட்கும் அளவிற்கு நிலைமை உருவானது.

vikramm 1

அதனை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய லோகேஷ் கனகராஜ் அதை வெற்றிகரமாக முறியடித்து தற்போது pan-india படமாக விக்ரம் திரைப்படத்தை கொடுத்துள்ளார். இந்த படத்தை பார்த்த அனைவரும் நல்லவிதமான விமர்சனங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டு வந்தனர்.

202107101737390255 first look of Kamals Vikram movie has been released SECVPF 1

அதிலும் படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் இணைக்கப்பட்ட விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததாக ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் ரசிகர்களால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏனென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனருக்கும் கட்டவுட் வைத்து மாலை அணிவித்து ரசிகர்கள் கொண்டாடி இருந்ததில்லை. ஆனால் முதல் முறையாக டைரக்டர் லோகேஷ் கனகராஜ் க்கு ஹீரோக்கள் ரேஞ்சுக்கு கட்டவுட் வைத்து ரசிகர்கள் மாலை அணிவித்து உள்ளனர்.

loki

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews