வேற லெவல் சார்- பாடலாசிரியரை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 9ல் மாஸ்டர் படம் திரைக்கு வருவதாக இருந்தது. தற்போதைய சூழலில் இப்படம் ஏப்ரல் 9ல் வர வாய்ப்பே இல்லை. ஏனென்றால் லாக் டவுன் முடிவடைவதற்கே ஏப்ரல் 14 ஆகி விடும்.


இப்படத்தின் பொளக்கட்டும் பர பர என்ற பாடல் லிரிக் பாடலாக நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பாடலை எழுதியவர் விஷ்ணு எடவன். இவர் கைதி மாஸ்டர் படங்களில் அசோசியேட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

இப்பாடலை எழுதிய விஷ்ணு எடவன் விஜய், விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேற லெவல் பாடலாசிரியர் சார் நீங்க என விஷ்ணுவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Published by
Staff

Recent Posts