லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம்… கமல், ஸ்ருதியின் புதிய அவதாரம்…

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்பது ஒரு இந்தியத் திரைப்பட ப்ரொடெக்ஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி ஆகும். இதன் உரிமையாளர் உலகநாயகன் கமலஹாசன் ஆவார். 1981 ஆம் ஆண்டு ‘ராஜபார்வை’ என்ற முதல் படத்தை இந்நிறுவனம் தயாரித்தது. இந்நிறுவனத்தின் முந்தையப் பெயர் ‘ஹாசன் பிரதர்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், அபூர்வ சகோதரர்கள், ‘தேவர் மகன்’, ‘மகளிர் மட்டும்’, ‘சதி லீலாவதி’, ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்கள் இறுதியாக நடிகர் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘அமரன்’ ஆகியவை இந்நிறுவனம் தயாரித்த படங்கள் ஆகும்.

இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ‘இனிமேல்’ என்ற ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆல்பத்திற்கான பாடல் வரிகளை நடிகர் கமலஹாசன் எழுதியுள்ளார் மற்றும் அவரது மகளான நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார்.

கடத்த பிப்ரவரி 7 ஆம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் தளத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்வது போல் உள்ள புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். அது என்னவென்று தெரியாத ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், உலகநாயகன் கமலஹாசன் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைத்தும் நடிக்கும் ஆல்பம் ‘இனிமேல்’ என்று வெளியிட்டுருந்தனர்.

இந்த ஆல்பத்தின் மூலமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகிறார். மேலும் இந்த ஆல்பம் எப்போது வெளியாகும் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews