டேஸ்ட்டியான கணவாய் மீன் குழம்பு!!

4fcbfc48fa2d01390c8e149bc8e51905

கடல் மீன் வகைகளில் கணவாய் மீன் அதிகம் பேரால் ருசித்து ரசித்து சாப்பிடும் உணவு வகையாகும். இப்போது நாம் கணவாய் மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை:
கணவாய் மீன் – 500 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் –   2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியா தூள்   – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1  ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2  ஸ்பூன்
கடுகு   – 1  ஸ்பூன்
கறிவேப்பிலை  – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். 
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை  போட்டு தாளித்து,  வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு  வதக்கவும்.
3. அடுத்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து இதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கணவாய் மீனைப் போட்டு வேகவிடவும்.
5. எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் கணவாய் மீன் குழம்பு  ரெடி
 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews