கடைசி வரை காப்பாற்றியதெல்லாம் வீணாப்போச்சே!.. திடீரென லீக்கான லியோ காட்சிகள்?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் சில முக்கியமான காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், தாமஸ் மேத்யூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 காலை உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த லியோ:

இதற்கு முன் இல்லாத அளவுக்கு கடைசி நேரம் வரை பல சிக்கல்களை லியோ திரைப்படம் சந்தித்துள்ளது. இசை வெளியிட்டு விழா ரத்து, சிகரெட் சர்ச்சை, நான் ரெடி தான் பாடல் வரி சர்ச்சை, ட்ரைலரில் இடம்பெற்ற விஜய் பேசும் ஆபாச வசனம், தியேட்டர் டிக்கெட் புக்கிங், தயாரிப்பாளர் அதிக ஷேர் கேட்பதாக புகார், லியோ டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் தெலுங்கில் ரிலீஸ் ஆகாது என்கிற நிலைமை என ஏகப்பட்ட சர்ச்சைகள் கடைசிவரை லியோவை பின்தொடர்ந்தது.

ஆனால், தற்போது அனைத்தையும் சரி செய்துவிட்டு லியோ திரைப்படம் நாளை காலை திட்டமிட்டபடி வெளியாக உள்ள நிலையில், தற்போது இன்னொரு புதிய பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

லியோ காட்சிகள் லீக்:

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட், வாரிசு படங்களின்
காட்சிகள் ரிலீசுக்கு முன்னதாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை போல, தற்போது லியோ படத்தின் காட்சிகள் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

காஷ்மீரில் நடிகர் விஜய் மற்றும் ஹைனா இடையே நடக்கும் படு பயங்கரமான ஸ்டன்ட் காட்சி வீடியோ தற்போது கசிந்து தீயாக பரவி வருகிறது.

ஹைனா காட்சி மட்டுமின்றி படத்தில் இருந்து பல முக்கிய காட்சிகள் கசிந்துள்ள நிலையில், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் அந்த காட்சிகளை அதிகம் பரப்பி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் லீக்கான காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என பதிவிட்டு மறைமுகமாக பார்த்து தங்களது ஹைப்பை எகிற வைத்துள்ளனர்.

வசூலில் மிரட்டும்:

விஜய்யின் லியோ படத்துக்கு எதிராக என்ன தான் பிரச்சனைகளை கிளப்பினாலும், கடைசியில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் லியோ மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தப் போவது உறுதி என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். திருட்டு பிரின்ட்டில் படம் வெளியானாலும், விஜய் படங்களை எல்லாம் தியேட்டரில் சென்று பார்க்க பல கோடி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றே கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...