ஜவான், பதான் வசூலுக்கும் வேட்டு வைத்த விஜய்!.. லியோவின் உண்மையான வசூலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!..

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 148.5 கோடி ரூபாயை வசூல் ஈட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான லியோ திரைப்படம் முதல் நாளில் போட்ட முதலில் பாதியை எடுத்திருப்பது பெரிய விஷயம் என தெரிகிறது. இந்த ஆண்டு வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்து விட்டு புதிய ரெக்கார்டை லியோ படைத்திருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

F84g8NbXAAEuKe6

உலகளவில் லியோ வசூல் சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மரியன், பிக் பாஸ் ஜனனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பார்த்திபன் ஆக மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நடிகர் விஜய் தனது குழந்தையை காப்பாற்றும் விதமாக துப்பாக்கி எடுத்து ஐந்து பேரை சுட்டுக் கொல்கிறார்.

பதான், ஜவான், ஜெயிலரை முந்தியது

அதன் பின்னர் அவரது புகைப்படம் லீக் ஆக இது பார்த்திபன் அல்ல லியோ தாஸ் என அவரது அப்பாவான சஞ்சய் தத் மகனைத் தேடி வருகிறார். சித்தப்பாவான அர்ஜுன் இடைவேளை கட்சியின் போது லியோ தான் பார்த்திபன் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓவியம் வரைந்து கண்டுபிடிக்கிறார்.

இரண்டாம் பாதியில் லியோ தாஸ் யாரு அவருக்கு என்ன ஆனது? ஏன் பார்த்திபனை லியோ எனத் தேடுகின்றனர். உண்மையிலேயே பார்த்திபன் தான் லியோ வா என பல ட்விஸ்ட்டுகளுடன் உருவாகியுள்ள லியோ படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் தியேட்டருக்கு படையெடுத்து பார்த்து வருகின்றனர்.

ஆக்சன் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் மிரட்டி உள்ள நிலையில் எந்த மொழியில் படத்தைப் பார்த்தாலும் ரசிகர்களுக்கு செம தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் கிடைப்பது உறுதி என்பதால் ரசிகர்கள் லியோ படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 106 கோடி வசூலை ஈட்டியது. சமீபத்தில், அட்லீ இயக்கத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 120 கோடியை ஈட்டியிருந்தது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 100 கோடியை எட்டியதாக கூறப்படுகிறது.  ஆனால், அனைத்து படங்களின் வசூலையும் விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் முறியடித்து 148.5 கோடி என்கிற புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews