ரூ.90 சம்பளத்துக்காக ரயில்வே வேலையை உதறிய நாகேஷ்.. அரசு வேலைக்கு குட்பை சொல்லி சினிமாவுக்கு என்ட்ரி ஆன தருணம்!

எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், தனுஷ் என 5 தலைமுறை நடிகர்களுடன் தனது அசத்தலான காமெடி நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர்தான் நாகேஷ். காமெடி மட்டுமல்லாது ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பன்முகம் கொண்டு சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிநடை போட்ட மகா கலைஞன். இவரும் கவிஞர் வாலியும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவிற்கும் உரிமையுடன் பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுக்கும் அளவிற்கு இவர்கள் நட்பு இருந்தது. இருவரும் ஒன்றாகவே சினிமாவில் வாய்ப்புத் தேடினர். ஒருவர் நடிப்புக்கு மற்றொருவர் பாடலுக்கு. இந்நிலையில் 90 ரூபாய் சம்பளத்திற்காக தான் பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே வேலையை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ் என்று கவிஞர் வாலி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில், “நானும் நாகேஷூம் ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்கள் இருவருக்குமே பணக்கார பின்னணி கொண்ட குடும்பங்கள் தான் இருந்தது. ஆனாலும் இஷ்டப்பட்டு நாங்கள் கஷ்டப்பட்டோம். நாகேஷ் நடித்த ஒரு படம் தாமரைக்குளம். அதில் 2 காட்சிகள் மட்டுமே நடித்திருப்பான். அதற்காக அவனுக்கு கொடுத்த சம்பளம் ரூ90. இந்த சம்பளத்தை நம்பி நாகேஷ் தான் பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டான்” என்று அந்தப் பேட்டியில் வாலி கூறியுள்ளார்.

செமஸ்டருக்குப் போகாமல் சித்ரா பாடிய பாட்டு.. இளையராஜா கொடுத்த நம்பிக்கையால் தேசிய விருது வென்ற ஹிட் பாடல்

அந்த காலக்கட்டத்தில், நண்பர் ஒருவர் நடித்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றிருந்த வாலி, நாகேஷை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பே மோதலில் முடிந்திருந்தாலும், பின்னாளில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியுள்ளனர். அதன்பிறகு சினிமாவில் மெல்ல மெல்ல நாகேஷ் நடிகராகவும், வாலி கவிஞராகவும் வாய்ப்பினை பெற்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக உருவெடுத்தனர்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைதல் என தொடர்ந்த முயற்சிகளும் முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல.  சென்னை தி.நகரில் ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பார் நாகேஷ். வாலியும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக் கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. இப்படித்தான் இவர்கள் இருவரும் இருந்தார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...