சிவாஜி கொடுத்த தடபுடல் திருமண விருந்தால் திக்கு முக்காடிய இயக்குநர் ஸ்ரீதர்.. புது மாப்பிள்ளைக்கு கொடுத்த காஸ்ட்லி கிப்ட்!

நடிகர் திலகம் சிவாஜி முதல் சீயான் விக்ரம் வரை பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ்சினிமாவின் புதுமை இயக்குநராக வலம் வந்தவர்தான் இயக்குநர் ஸ்ரீதர். 1954-ல் இரத்த பாசம் என்ற படத்தில் தனது திரைவாழ்க்கையை வசனகார்த்தாகவாகத் தொடங்கியவர் ஜெமினிகணேசன், சரோஜாதேவி நடித்த கல்யாணப் பரிசு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் உள்ளிட்டோரை வைத்து பல ஹிட் படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவின் முழுநீள காமெடிப் படமான காதலிக்க நேரமில்லை இவரின் கைவண்ணத்தில் உருவானதே. மேலும் ஜெயலலிதாவை தனது வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

இப்படி திரையில் பல புதுமைகளையும், பல புதுமுகங்களை வைத்து வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீதர். இவரின் மனைவி தேவசேனா. நிழல் போல கணவனுக்காக கடைசி வரை அவரை கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொண்டவர். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அழைப்பு விடுத்திருந்த தருணத்தில் அப்போது சிவாஜி ஜெய்ப்பூரில் கர்ணன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார்.

‘மகாராசன்‘ படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த கமல்.. பதிலுக்கு வீட்டின் பெயரையே ‘கமல் இல்லம்‘ என மாற்றிய இயக்குநர்!

இதனால் அவரின் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் தனது குடும்பத்தினரை திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்தார். திருமணச் சடங்குகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிவாஜியிடம் இருந்து ஒரு டிரங்கால் வந்தது. அப்போது ஸ்ரீதரிடம் சிவாஜி டிரங்கால் பேசும் விஷயத்தைச் சொன்னவர்கள் உடனே போனை வாங்கிப் பேசியிருக்கிறார்.

மறுமுனையில் நடிகர் திலகம் ஸ்ரீதருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து பின்னர் தனது குடும்பத்தினர் கலந்து கொண்டார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார். பின்னர் உனது கல்யாணத்தில் கலந்து கொள்ள கமலாவிற்கும் மிகுந்த ஆசை. ஆனா நான் இங்க அவங்களை அழைச்சுட்டு வந்துடேன் என்று கூறியிருக்கிறார் சிவாஜி.

பின்னர் சில நாட்கள் கழித்து புதுமணத் தம்பதிகளான ஸ்ரீதர்-தேவசேனாவிற்கு சிவாஜி தனது இல்லத்தில் தடபுடல் விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொண்ட தம்பதியினருக்கு சிவாஜி தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசளித்தார்.

பின்னர் ஸ்ரீதரிடம், “காலேஜ்ல படிச்சிட்டு இருக்கிற பொண்ண கல்யாணம் பன்னிக்கிட்ட அவ படிப்பை நிறுத்திடாத தொடர்ந்து படிக்க வை. இனிமேல் கரெக்டா வீட்டுக்கு வந்து சேரு” என்று அட்வைஸ் செய்திருக்கிருக்கிறார் நடிகர் திலகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...