‘மகாராசன்‘ படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த கமல்.. பதிலுக்கு வீட்டின் பெயரையே ‘கமல் இல்லம்‘ என மாற்றிய இயக்குநர்!

உலக நாயகன் கமல்ஹாசன் தனது ஒவ்வொரு படைப்பிலும் பல தனித்தன்மைகளையும், திறமையையும் நிரூபித்து இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் கமலை வளர்த்து விட்ட இயக்குநர்கள் பலர்.

கே.பாலசந்தர் ஹீரோவாக அறிமுகப்படுத்திய பின், பாலு மகேந்திரா, பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் என பல இயக்குநர்கள் கமலிடம் ஒளிந்திருந்த பல திறமைகளை தங்களது படத்தின் மூலமாக வெளிக் கொணர்ந்தனர். அந்த வகையில் உலக நாயகனின் திறமையை தனது படத்தின் மூலம் வெளிக் கொண்டுவந்த இயக்குநர் தான் ஜி.என்.ரங்கராஜன்.

பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் படைப்புகளின்பால் ஈர்க்கப்பட்டு சினிமாவில் நுழைந்து எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவரின் திறமையை அறிந்த கமல்ஹாசன் பஞ்சு அருணாச்சலம் கமலை வைத்து ஒரு படத்தினை தயாரிக்க விரும்பிய போது அவரிடம் ரங்கராஜனை சிபாரிசு செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

அதன்பின் ரங்கராஜன் கமல்ஹாசனை வைத்து கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, கடல்மீன்கள், எல்லாம் இன்ப மயம் உள்ளிட்ட வரிசையாக வெற்றிப் படங்களை இயக்கினார். அதன்பின் இவர் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படம் தான் ‘ராணித் தேனீ‘. இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்.. காரணம் இதான்

எனினும் இந்தப் படம் தோல்வியைச் சந்தித்தது. இதனால் இயக்குநர் ரங்கராஜன் கடனாளி ஆனார். பின்னர் மீண்டும் கமலை வைத்து மகாராசன் என்ற படத்தினை இயக்கினார். தன்னை வளர்த்து விட்ட இயக்குநருக்கு தான் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் ரங்கராஜன் தயாரித்து இயக்கிய  மகாராசன் என்ற படத்தில் கமல் நடித்துக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக கமல் சம்பளமே வாங்காமல் நடித்தார்.

கமல்ஹாசனின் இந்தப் பண்பினை அறிந்து நெகிழ்ந்த இயக்குநர் ரங்கராஜன் அவர் மீது கொண்ட அன்பு காரணமாக தனது வீட்டின் பெயரை கமல் இல்லம் என மாற்றினார். மேலும் தனது மகன் ஜி.என்.ஆர். குமரவேலனையும் கமல் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்ற வைத்தார்.

கமலிடம் சதிலீலாவதி, மருதநாயகம் உள்ளிட்ட படங்களில் பயிற்சி பெற்றபின் குமரவேலன் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் போன்ற படங்களை எடுத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.