பாலிவுட்டில் கலக்கப்போகும் தமிழ் முன்னணி காமெடி நடிகர்…

நடிகர் யோகிபாபு அவர்கள் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதால் யோகி பாபு என்று அழைக்கப்படுகிறார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக யதார்த்தமான பேச்சிலும் முக பாவனைகளாலும் மக்களை கவர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதில் இவர் நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் சிறப்பான வரவேற்ப்பை பெற்றது.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் ‘ராஜா சாப்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். ஏற்கனவே இந்தியில் ஓரிரு படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட் இயக்குனர் அனிஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிஸ் பாஸ்மி இயக்கம் இத்திரைப்படம் ஒரு ஹாரர் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘புல் புல்லையா 2’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 177 படங்களுக்கு மேல் முன்னணி காமெடியனாக நடித்த யோகி பாபு தனது தனித்துவமான நகைச்சுவை பாணியின் மூலம் தனி ரசிகர் கூட்டத்தையே சம்பாதித்திருக்கிறார். சிறந்த காமெடியனுக்கான சைமா விருதையும் பெற்றிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.