லதா ரஜினிகாந்த் இத்தனை பாடல்கள் பாடியிருக்கிறாரா? சூப்பர் ஸ்டாருக்கு சளைக்காத மனைவி!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்பதை உணர்த்தும் விதமாக சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்தின் திரையுலக வெற்றிக்குப்பின் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த். தில்லுமுல்லு படப்பிடிப்பின் போது தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை காதலித்து பின் தனது தாரமாக ஆக்கிக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரையில் உச்ச நடிகராக இருந்த போது ரஜினியின் நடிவடிக்கைகள் மாறுதல் அடைந்த போது அவரை மீட்டு மீண்டும் மனிதனாக்கி அவரை ஆன்மீகத்தின் பால் திருப்பி அவரை மனிதனாக வாழ வைக்கும் பெண் சக்தி லதா ரஜினிகாந்த்.

1980-ல் ரஜினியைக் கரம்பிடித்த லதா ரஜினிகாந்த் அவரின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார். ரஜினியின் நடிப்பை மட்டுமே திரையில் பார்த்துக் கொண்டாடிய நாம் அவரின் மனைவி லதாரஜினிக்குள்ளும் ஒரு சிறந்த பாடகி உள்ளார் என்பதை அறியத் தவறிவிட்டோம்.

இளையராஜாவின் இசையில், நட்ராஜ் இயக்கத்தில்1984-ல் வெளியான திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆகவே நடித்திருப்பார் ரஜினி. இப்படத்தில் வரும் கடவுள் உள்ளமே.. கருணை இல்லமே என்ற பாடலைப் பாடியது லதா ரஜினிகாந்த் தான். இதுமட்டுமன்றி ரஜினியின் சொந்த தயாரிப்புப் படமான வள்ளி படத்திலும் குக்குக் கூ.. கூ..கூ எனக் கூவும் குயிலக்கா என்ற பாடலையும் லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார்.

இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா?

கமல் நடித்த டிக் டிக் டிக் படத்தில் நேற்று இந்த நேரம் என்ற பாடலையும் பாடிய அவர் தொடர்ந்து  இவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான கோச்சடையான் அனிமேஷன் படத்திலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மணப்பெண் சத்தியம் என்ற பாடலையும் லதா ரஜினிகாந்த் பாடியிருக்கிறார். மேலும் மாவீரன், வள்ளி போன்ற படங்களின் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

இதைத்தவிர சென்னையின் பிரபல பள்ளி ஒன்றையும் நடத்தி வரும் லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். மேலும் ரஜினி 25 நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த் 5 ஆல்பம் பாடல்களை பாடி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews