தலைவரு வேற லெவல்.. வெளியான ‘லால் சலாம்’.. டிரெண்ட் ஆகும் டிவிட்டர் விமர்சனங்கள்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது லால் சலாம் திரைப்படம். பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரேஸில் இருந்து பின்வாங்கி தற்போது ஒருமாதம் கழித்து இன்று உலகெங்கிலும் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

தனுஷ் நடித்த ‘3’, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் தான், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தருந்தது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி இருந்தன.

கல்யாண வீடு என்றாலே இவர் பாட்டு இல்லாத மணமேடையே இல்ல..‘நூறு வருஷம்..’ ஹிட் பாடலின் சொந்தக்காரர் இவரா?

இப்படத்தில் ரஜினிகாந்துடன் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைகா சுபாஷ்கரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இந்நிலையில் படம் பார்த்தவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என லால்சலாம் டிவிட்டர் விமர்சனம் தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.

ரசிகர் ஒருவரின் பதில் “அக்கா ஜெயிச்சுட்டாங்க..“ என்றும் “எங்க பேவரிட் லிஸ்ட்-ல லால்சலாம் சேர்ந்திருச்சு எனவும் பதிவிட்டுள்ளார்.

Lal

ஆனால் மற்றொருவர் “என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை“ என்று திரையரங்கு புக்கிங் -ஐ ஸ்கீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் பல காட்சிகள் இருக்கைகள் காலியாக இருப்பதை அவர் உணர்த்துகிறார்.

Lal

இன்னொருவர் “தலைவர் என்ட்ரி செம“ என்றும், எமோஷனல் காட்சிகளில் விஷ்ணுவிஷால் அழ வைக்கிறார் எனவும், விக்ராந்துக்கு செம மாஸ் என்றும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கிங் என்றும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கம்பேக் என்றும் பதிவிட்டுள்ளார்.

Lal salam

இன்னொரு பதிவில் “படத்தின் இரண்டாம் பாகம் பட்டையைக் கிளப்புது எனவும், படம் அந்தர் மாஸ் எனவும், படத்தை ரசிகர்களைக் காட்டிலும் பொதுமக்கள் கொண்டாடுவர் எனவும், தலைவர் மாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை சூப்பர் எனவும், ஐஸ்வர்யா ரஜினிக்கு இது முதல் 100 கோடி வசூல் படமாக இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Lal

தொடர்ந்து படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.