பொங்கல் ரேஸில் இருந்து விலகிய லால் சலாம் திரைப்படம்! ரிலீஸ் தேதி குறித்து மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக உருவாக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்தது. இதை அடுத்து 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பின்னுக்கு தள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பின் தற்பொழுது மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். லைக்கா தயாரிப்பில் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் நடைபெறும் சில ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது இந்த படத்தின் மைய கதையாக இருக்கும் என சில தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருப்பதாகவும் இவரின் கதாபாத்திரம் படத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் கேமியோவாக நடித்திருக்கும் லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின.அதே நேரத்தில் முன்னணி இளம் நடிகரான தனுஷ் நடிப்பில் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் வெளியாக இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸிலிருந்து விலகியதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் பிசினஸ் சரியாக நடைபெறாததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியின் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் டிஜிட்டல் உரிமையை வாங்க எந்த நிறுவனமும் முன் வராதது இந்த படத்தின் ரிலீஸ் தேதி பின்னடைவிற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட் வெளியாகிய உள்ளது.

ரஜினியின் வீட்டில் தரையில் அமர்ந்து அடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த்!

இந்த திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி அடுத்ததாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி அன்று 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் கெஸ்ட் ரோலில் மட்டுமே ரஜினி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் ரஜினியின் காட்சிகள் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது. பொதுவாக பிப்ரவரி மாதத்தில் எந்த திரைப்படங்களும் வெளியாகாத நிலையில் லால் சலாம் திரைப்படம் வெளியாவது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.