லால் சலாம் படத்தின் படக்காட்சிகள் காணோமா?.. அதுவும் ரஜினி நடிச்ச காட்சிகளா? என்ன ஆகப் போகுதோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் படக் காட்சிகளை காணவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 525 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்

ஜெயிலர், தலைவர் 170 படங்களுக்கு நடுவில் ‘லால் சலாம்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘3’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியானது. அதையடுத்து கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனராக மாறியுள்ளார். இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடு ரோலில் நடித்துள்ள’லால் சலாம்’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

மொய்தீன் பாயாக ரஜினி

மொய்தீன் பாய் என்ற இஸ்லாமிய கேங்ஸ்டராக ரஜினி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக வெள்ளை ஜிப்பா, தாடியுடன் ரஜினி அசத்தலான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையதலத்தில் வைரலானது.

லால் சலால் படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள நிலையில் தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுயிருந்தது. இதன் படப்பிடிப்பு செஞ்சியில் உள்ள பழைமை வாய்ந்த அம்மன் கோயில் ஒன்றில் தொடங்கி, பாண்டிச்சேரி, மும்பை, திருவண்ணாமலை எனத் தொடர்ந்து நடந்தது.

காணாமல் போன காட்சிகள்

கிரிக்கெட் தொடர்பான இந்தக் கதையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கியமான ஒரு காட்சியிலும் மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவானாகவும் தோன்றவிருக்கிறார். படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை, திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இந்த படத்தில் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் மும்பையில் ரஜினி உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அந்த காட்சிகளை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்க்கை திறந்து பார்த்தால் அதில் காட்சிகள் காணாமல் போனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதை மீட்டெடுக்க நவீன தொழில்நுட்ப மென்பொருளை அமெரிக்காவில் இருந்து படக்குழுவினர் வரவழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கலுக்கு திட்டமிட்டபடி லால் சலாம் படம் வருமா? என்கிற சந்தேகம் உருவாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...