சம்பவம் செய்த கமல்! தக் லைஃப் படத்தில் இப்படி ஒரு ரணகளமா?

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தூங்காவனம், உத்தம வில்லன்,பாபநாசம், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைக்க தவறிய நிலையில் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தத் திரைப்படம் கமலின் திரை வாழ்க்கைக்கு கம்பேக்காக அமைந்தது. அதைத் தொடர்ந்து கமல் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்கள் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மக்களிடையே பிரபலமடைந்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருகிறார். சங்கர் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. அடுத்த ஆண்டு இந்த இரண்டு திரைப்படமும் வெளியாக உள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக 40 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஹச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கமலஹாசனின் நாயகன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அதாவது கமல் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் கமலின் 234 வது திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த மாதம் கமலின் பிறந்தநாள் அன்று கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் 234வது படத்தின் டைட்டில் மற்றும் வீடியோ வெளியாகி கமல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. தக் லைஃப் என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம் பீரியாடிக்கல் பிலிம் ஆக வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதாவது 1800 களில் வாழ்ந்த தக்குகளின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த தக் லைஃப் திரைப்படம் உருவாகுவது போன்ற தோற்றத்தில் அந்த வீடியோ அமைந்திருக்கும்.

ஆனால் இந்தத் திரைப்படம் ஒரு பீரியட் பிலிம் இல்லை என்றும் சமகாலத்தில் நடக்கும் அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாக பிரபல திரை விமர்சகர் சமூக வலைதளங்களில் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டைட்டில் புரோமோ வீடியோவில் வரும் காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் இடையே தூண்டுவதற்காக வித்தியாசமான முறையில் ஏற்படுத்தப்பட்டதாகவும் அந்த வீடியோவிற்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை என்றும் தகவலை கூறியுள்ளார். முன்னதாக கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் டீசர் வீடியோவும் இதுபோன்ற வித்தியாசமான மாறுபட்ட கோணத்தில் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கச்சியாகும் வாய்ப்பை தவறவிட்ட இவ்வானா! தட்டிப்பறித்த சுந்தர் சி பட ஹீரோயின்!

மேலும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் பொழுதே ஹச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திலும் கமல் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமல் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படங்களை தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் அட்லியுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.