கும்பம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும்.

கும்ப ராசியினைப் பொறுத்தவரை சூர்ய பகவான்4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீட்டால் நீங்கள் எதிர்பார்த்திராத பல பிரச்சினைகள் ஏற்படும்.

வேலை வாய்ப்புக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு இவ்வளவு கால கஷ்டத்திற்குப் பதில் சொல்லும் வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழில்துறை சார்ந்தோருக்கு இதுவரை இருந்த நஷ்டங்கள் சரியாகும்; லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள்.

தொழில் அபிவிருத்தி செய்யும் முயற்சியினைத் தற்போதைக்குத் தள்ளி வையுங்கள். தந்தையுடனான உறவில் மனக் கசப்பு ஏற்படும். வீடு கட்டிய நிலையில் கிடப்பில் போடும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

பணப் புழக்கம் பெரிதளவில் இருக்காது; எதிர்பார்த்த இடங்களில் கடன் உதவிகள் கிடைக்கப் பெறாது. திருமண காரியங்களில் வரன் அமைவதுபோல் இருக்கும்; ஆனால் வழக்கம்போல் தட்டிப் போகும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உடன் பிறப்புகளுடன் மனக் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும், எடுத்த காரியங்களில் தடைகள் இருந்தாலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். ஜென்மத்தில் சனி இருப்பதால் பேசும்போது மிகக் கவனத்துடன் இருத்தல் வேண்டும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

லட்சுமி நரசிம்மப் பெருமாள் வழிபாடு செய்து வந்தால் உங்களின் கஷ்டங்கள் தீரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews