கும்பம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

கும்ப ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் உங்கள் ராசியில் இட அமர்வு செய்கின்றார். சனி பகவான் ராசியில் இருப்பதால் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். வயிறு மற்றும் முதுகு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றினைத் தவறாமல் கடைபிடிக்கவும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

கூடா நட்பால் தேவையற்ற பெரிய பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கோப, தாபம் வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லையெனில் பலவிதமான சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.

தொழில் ரீதியாக கணக்கு வழக்கினை முறையாகப் பராமரித்தல் அவசியம், இல்லையேல் தொழில் பங்குதாரர்களுடன் வீண் பிரச்சினைகள் ஏற்படும். யாரிடமும் பணத்தினைக் கொடுத்து எந்தவொரு முதலீட்டையும் செய்யாதீர்கள். நம்பிக்கைமிக்க வங்கிகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள்.

யாரையாவது நம்பி ஏதாவது ஒரு பொறுப்பினைக் கொடுக்கும் பட்சத்தில் அது பெரும் பிரச்சினையில் முடியும்; சட்ட சிக்கலாக இருக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் தொடர் உடல் நலக் குறைவுகள் ஏற்படும். செய்யும் எந்தவொரு விஷயத்தையும் எச்சரிக்கையுடன் செய்தல் வேண்டும்.

தொழில், வேலை, படிப்பு என அனைத்து விஷயங்களும் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் சற்று மந்தநிலையிலேயே காணப்படும். கும்பத்தில் சனி இருக்கும் காலகட்டம் என்றாலும் திருமண தடைகள் முறிந்து போகும், வரன் அமையும் பட்சத்தில் தயங்காமல் சுப காரியங்களை நடத்தலாம்.

குடும்பத்தில் ஏற்பட்டு இருந்த பிரச்சினைகள் சரியாகி குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்வர். உங்களிடத்து சற்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலோடு செயல்பட்டு இந்த சனிப் பெயர்ச்சி காலத்தினைக் கடப்பீர்கள். தொழில் சார்ந்து பெரிய அளவிலான மாற்றங்களை மார்ச் வரையிலான காலகட்டத்தில் செய்யாது இருத்தல் நல்லது.

பிரசித்தி பெற்ற அனுமன் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.