ஆன்மீகம்

கும்பகோணம் நகரத்தின் பெயர் சொல்லும் கோவில்

ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் பெயரை சொன்னவுடன் உடனே சொல்லும் அளவு ஒரு முக்கிய கோவிலின் பெயர் அனைவருக்கும் நியாபகம் வரும்.

மதுரையை எடுத்துக்கொண்டால் டக்கென்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், திருச்சியை எடுத்துக்கொண்டால் உடனே திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலும், தஞ்சாவூரை எடுத்துக்கொண்டால் பெருவுடையார் கோவிலும், சென்னையை எடுத்துக்கொண்டால் கபாலீஸ்வரர் கோவிலும் நம் மனக்கண்ணில் உடனே வந்து போகும் கோவில்கள். இந்த நகரங்களில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் சொன்ன உடன் மனதில் நினைவு வரும் கோவில்கள் இவை.

இது போல கோவில் நகரமான கும்பகோணத்தில் ஊரை சுற்றி பல கோவில்கள் இருந்தாலும் கும்பகோணம் நகரத்தின் பெயரை சொல்லும் கும்பேஸ்வரர் கோவில் மிக முக்கியமானது.

பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க  இறைவன் தந்த அமுதகலசம் இங்கு தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது  அந்தக்கால நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்திக் இருந்து வெளிப்பட்டவர் என்பதால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார்.

அகத்தியர் இக்கோவிலில் தான் ஜீவசமாதியாகியுள்ளார். முக்கிய கோவிலான இந்த கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

கும்பகோணம் நகரம் சென்றால் இங்கு செல்ல மறவாதீர்.

Published by
Abiram A

Recent Posts