மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!

தசரா திருவிழாவில் காளி வேஷம் போடுவது ரொம்பவே முக்கியமான ஒன்று. இதைக் கடுமையாக விரதம் இருப்பவர்களால்தான் போட முடியும். 48 நாள்கள் தினமும் இருவேளை குளித்து கோவிலில் சமைத்து அங்கேயே படுத்து தூங்கி ஒருவேளை மட்டும் உண்டு பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

இந்தக்காளி வேஷத்தைப் பெண்கள் போடக்கூடாது. பெண்கள் 10 வயசுக்குக் கீழ இருக்கணும். இல்ல 50 வயசுக்கு மேல இருக்கணும். அப்போ தான் இந்த பத்ரகாளி வேஷத்தைப் போட முடியும். அவ்வளவு சக்தி வாய்ந்த வேடம்.

குலசையில் தசரா திருவிழா கொண்டாடப்படுவதற்கு இந்தக்கதை தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. கோவில் சுவரிலும் இந்தக்கதையைத் தான் வரலாறாய் வரைந்து வச்சிருக்காங்க. வாய்வழியாக முத்தாரம்மனுக்கு நிறைய கதைகள் உண்டு.

Kali ukkiram
Kali ukkiram

ஒரு நாகக்கன்னி வயிற்றில் பிறந்த அஷடகாளிகளான எட்டு பெண்களில் மூத்த பெண் முத்து மாரியம்மன் தான் இந்த முத்தாரம்மன். இன்னொரு கதையில் பாண்டிய வம்சத்தில் பிறந்த பார்வதி தேவி மீனாட்சி அம்மனாக எல்லா நாட்டையும் போரிட்டுத் தன் வசப்படுத்தி வெற்றி பெற்று வந்திருக்காங்க.

அப்போ ஜெயிக்கறதுக்கு ஆளே இல்லன்னு பரம்பொருளான சிவபெருமானையேத் தோற்கடிக்கணும்னு கைலாயத்துக்குப் போயிருக்காங்க. அப்போ சிவபெருமானோடக் கண்ணை நேருக்கு நேராப் பார்த்ததும் ரெண்டு பேருக்குமே காதல் வந்திருக்கு.

சிவபெருமான் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் திருமணம் செஞ்சி பாண்டிய நாட்டை நல்லாட்சி செய்து வந்தாங்க. அப்போ தன் கணவரோடு ஜோடியா மீனாட்சி அம்மன் பாண்டிய நாட்டை வலம் வந்த போது ஒரு கிராமத்துல வெள்ளத்துல மாட்டி தத்தளிச்சிக்கிட்டு இருந்த ஒரு அண்ணன் தங்கையை மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் காப்பாற்றியிருக்காங்க.

Meenakshi Sokkanathar
Meenakshi, Sokkanathar

அப்ப அவங்க இரண்டு பேரும் எங்களைக் காப்பாற்றுன மாதிரி நீங்க இந்த ஊர்லயே இருந்து ஊர் மக்களையும் காப்பாற்றுங்கன்னு வேண்டிக்கிட்டதால ஊர்லயே இருக்க முடிவு செஞ்சிருக்காங்க. இதனால தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரருமாக ரெண்டு பேரும் ஜோடியா ஒரே பீடத்துல அமர்ந்து எல்லாருக்கும் அருள்பாலிக்கிறாங்க.

தூத்துக்குடியில் தான் அரிய வகை முத்துக்கள் கிடைச்சிருக்கு. அந்த அபூர்வமான முத்துகளை எல்லாம் குலசேகர மன்னர் மாலையாகக் கோர்த்து இந்த அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வந்ததாலயும் முத்தாரம்மன்னு பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

அதோடு இந்த அம்மன் மனிதரகளுக்கு வந்த அம்மை நோயையும் சரிபண்ணி வந்திருக்காங்க. அதனால் முத்து ஆற்று அம்மன். காலப்போக்கில் முத்தாரம்மன் ஆனது. ஆரம்பத்தில் முத்தாரம்மனுக்கும் ஞானமூர்த்தீஸ்வரருக்கும் பெரிய உருவ சிலை எல்லாம் கிடையாது.

சின்ன சுயம்புவாகத் தோன்றிய ஒரே கல்லைத் தான் வழிபட்டு வந்துருக்காங்க. அப்புறம் ஒருநாள் கன்னியாகுமரி மாவட்டம் மயிலடி என்ற ஊரில் இருந்த சுப்பையா ஆசாரி கண்ணாலப் பார்;த்ததை அப்படியே சிலையாக செதுக்கிடுவாரு. அவரோட கனவுல சிவனும் முத்தாரம்மனும் தோன்றி தங்களோட உருவத்தைக் காண்பித்து எங்களுக்கு ஒரு சிலை செய்து கொடு.

சிலை செதுக்க வேண்டிய பாறை இந்த இடத்துல இருக்குன்னு அந்தப் பாறை இருக்கும் இடத்தையும் காமிச்சிக் கொடுத்திருக்காங்க. கூடிய சீக்கிரமே குலசேகரத்தில இருந்து இந்த சிலையை வாங்க வருவாங்க. அவங்களுக்கு சிலையைக் கொடுன்னு அந்த ஆசாரிக்குக் கட்டளையிட்டாங்க முத்தாரம்மன்.

அடுத்த நாள் அக்கம்பக்கத்துல உள்ளவங்கக்கிட்ட குலசேகரப்பட்டினம்னு ஒரு ஊர் இருக்கா….உங்களுக்குத் தெரியுமான்னு விசாரிச்சிருக்காரு அந்த ஆசாரி. அப்படி ஒரு ஊரைக் கேள்விப்பட்டதே இல்லையே… தெரியாதுன்னு எல்லோரும் சொல்லியிருக்காங்க. இருந்தாலும் அந்த சுப்பையா ஆசாரி அம்மை அப்பனோட ஆணையை ஏற்று அவங்க கனவுல வந்த பாறை இருக்குற இடத்துக்குப் போயி பார்த்துருக்காரு. ஒரே ஆச்சரியம்.

கனவில சொன்ன அந்தப்பாறை அந்த இடத்துல தான் இருந்துருக்கு. அம்பாள் சொன்ன மாதிரி ஒரே கல்லுல அம்மையையும் அப்பனையும் செதுக்கி வச்சிருக்காரு.

God statue
God statue

குலசேகரப்பட்டினத்தில் உள்ள கோவில் பூசாரியோடக் கனவில் முத்தாரம்மன் தோன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிற மயிலடி என்ற ஊருக்குப் போயி தன்னோட உருவச்சிலையை வாங்கிட்டு வான்னு ஆணையிட்டுருக்காங்க. கோவில் பூசாரியும் மயிலடிக்குப் போயி சந்தோஷமும் ஆச்சரியத்துடனும் சாமி சிலையை வாங்கிட்டு வந்து சுயம்பு சிலைக்குப் பின்னால பிரதிஷ்டை செஞ்சிருக்காரு.

அளவு எடுத்து செஞ்சது மாதிரி கனகச்சிதமா அந்த சிலை பொருந்திருக்கு. அப்போது இருந்தே உருவ வழிபாடு இருந்து வருது. அந்தக் கோவிலுக்குப் போயி தரிசனம் செஞ்சாலே நம்முடைய உடம்புல ஒரு புதுவித அதிர்வுகள் உண்டாவதை உணர முடியும்.

Kali vesham 1
Kali vesham

இந்த பாசிட்டிவ்வான அதிர்வலைகள் தான் லட்சக்கணக்கான மக்களை தன்னைத் தேடி இன்றும் வரவழைக்குது. மருத்துமனையில் உள்ள டாக்டர்களாலே சரிசெய்ய முடியாதுன்னு சொல்லப்பட்ட பெரிய பெரிய வியாதிகள் கூட இந்தக் கோவிலில் வேடமணிந்து வழிபட்ட போது சரியாயிருக்குன்னு சொல்றாங்க.

நம்ம தமிழ் சினிமாவுல திருவிழாவை எல்லாம் காமிச்சா அதுல ஆக்ரோஷமா பத்ரகாளி வேஷம் போட்டுக்கிட்டு 16, 32 கை வைச்சிக்கிட்டு உடம்பு பூரா கரி பூசிக்கிட்டு வருவாங்க. அப்படின்னா நீங்க தாராளமா குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தான் இதுன்னு கண்டுபிடிச்சிடலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.