குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் பிரண்டை துவையல்



அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.


தேவையான பொருட்கள்..

 கறிவேப்பிலை – சிறிது

 பிரண்டை – 1 கப் (சுத்தம் செய்து நார் எடுத்தது)

 காய்ந்த மிளகாய் – 7 

புளி – சிறு எலுமிச்சையளவு

 எள் – 1 கரண்டி 

உளுந்து – 50 கிராம் 

கடலை பருப்பு – 50 கிராம் 

உப்பு – தேவைக்கு


செய்முறை: முதலில் பிரண்டை, கறிவேப்பிலை இரண்டையும் ஆய்ந்து, பிறகு அலசி வைக்கவும். பருப்புகள், மிளகாய், புளி, எள் எல்லாவற்றையும் வாணலியில் வறுத்து  வைக்கவேண்டும். பிறகு பிரண்டை, கறிவேப்பிலை இரண்டையும் வதக்கி வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்புடன் வதக்கியவற்றையும், வறுத்தவற்றையும்  சேர்த்து அரைத்தெடுத்தால் பிரண்டை துவையல் ரெடி.

சூடான சாதத்தோடு நெய்யுடன் இந்த துவையலை சேர்த்து சாப்பிட்டு வர செரிமான கோளாறுகள் நீங்கும். உடைந்த எலும்புகள் கூடும்..

Published by
Staff

Recent Posts