ஆன்மீகம்

தீராத நோய் தீர்க்கும் திருமாத்திரை – கொம்மடிகோட்டை கோவில் அதிசயம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிக்கு வந்த வாலைகுருசாமி என்ற சித்தரும் அவரது சீடரும் தாங்கள் தேடி வந்த வாலை தெய்வம் இங்குதான் உள்ளது என தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் தவம் புரிந்தனர். சித்தர்கள் அம்மனின் உருவமான வாலையை பூஜித்தனர் வாலை அம்மன் பல்வேறு அற்புதங்கள் செய்பவள். வாலையை உபாசித்தாள் சகல சக்திகளும் செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவர்கள் இங்குள்ள மஞ்சனத்தி மரத்தின் அடியில் தவம் இருந்தனர். வாலையை பூஜித்து வாலையம்மனுக்கு கோவில் கட்டினர். காலப்போக்கில் அவர்களும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர்.

இவர்களுக்கும் இங்கே கோவில் உள்ளது.இந்த கோவிலில் உச்சிஸ்ட கணபதி, சிவன், அம்பிகை , நடராஜர், வராஹி என பலருக்கும் சன்னதி உள்ளது.

சித்தர் வாலை குருசாமியும் இங்கு இருந்தபோது மஞ்சனத்தி மர இலை, புளிய இலை,வேப்பிலை, வில்வ இலை, எலுமிச்சை சாறு கலந்து அம்மியில் வைத்து அரைக்கப்பட்டு அவை மிளகு போல சிறு சிறு உருண்டைகளாக உருட்டப்பட்டு மாத்திரைகளாக்கி பலருக்கும் கொடுக்கப்பட்டது.

இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இன்றளவும் இந்த மாத்திரைகள் தயார் செய்யப்பட்டு கோவிலில் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கி 41 நாட்கள் சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

இங்கு வந்து குருமார்களை வணங்கி வாலை அம்மனையும் வணங்கி திருமாத்திரை பிரசாதம் வாங்கி உட்கொண்டு இறைவன் அருளால் அனைத்திலும் இருந்து குணமடைவீர்களாக.

Published by
Abiram A

Recent Posts