இவங்க வாரிசெல்லாம் பிரபல டாக்டர்களா? ஜெமினி மகள்கள் முதல் ஷங்கர் மகள் வரை மருத்துவர்களான திரை வாரிசுகள்!

திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது வாரிசுகளையும் திரைத் துறையில் அறிமுகப்படுத்தி தலைமுறை தலைமுறையாக திரையுலகில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். பலர் ஹீரோ, ஹீரோயின்களாகவும் உள்ளனர். இதில் நடிகர் திலகம் முதல் இப்போதுள்ள மக்கள் செல்வன் வரை அடங்கும்.

இவர்களின் வாரிசுகள் திரையில் நுழைய ஆனால் சில நடிகர்கள் தங்களுடன் இந்தத் துறை போதும் என்று அவர்களது வாரிசுகளை வேறு துறையில் களமிறக்கி விட்டனர். ஆனால் அதில் பெரும்பாலும் மருத்துவர்களே. அப்படியாக மருத்துவர்களாக பணிபுரியும் உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகள் யாரென்று காணலாம்.

நடிகர் ஜெய்சங்கர் மகன், டாக்டர் விஜய் சங்கர் அவர்கள் சென்னையில் பிரபல கண் மருத்துவர் ஆவார். பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாடிக்கையாளர்கள். பல மக்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கு காரணமானவர் டாக்டர் விஜய் சங்கர் அவர்கள், சங்கர் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆவார்.

அவரு என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு..? மாரி செல்வராஜுக்கு வக்காலத்து வாங்கிய வைகைப் புயல்

நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் மகள், டாக்டர் கமலா செல்வராஜ் சென்னையில் மிக பிரபலமான மகப்பேறு மருத்துவர். இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபியை அறிமுக படுத்தியவர்.

நினைவெல்லாம் நித்யா படத்தில் நடித்த ஜெமினி கணேசனின் இரண்டாவது மகள் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் அவர்களும் சென்னையில் பிரபலமான மருத்துவர் ஆவார்.
விடுதலைப் போராட்ட வீரர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஜெமினி கணேசனின் அத்தை ஆவார்!!

நடிகர் ஜெமினி கணேசன் மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். ஆனால் காலத்தின் கோலம் அவர் நடிகராக வேண்டும் என்பதேயாகும். அதனால் தான் தன் மருத்துவர் கனவை மகள்கள் மூலம் நிறைவேற்றினார்!! இன்று இவர்கள் குடும்பத்தில் பலரும் மருத்துவர்கள்.

நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் டாக்டர் மணிகண்ட பிரபு சென்னையில் பிரபலமான பல் மருத்துவர் ஆவார். மணிகண்ட பிரபு அவர்களின் மனைவியும் பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மகன் டாக்டர் கமல் கண்ணதாசன் அவர்கள் சென்னையில் பிரபல பல் மருத்துவர் ஆவார். தமிழ் சினிமாவில் நடிகரும் பாடகரும் ஆன சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் மகன் டாக்டர் சிவ சிதம்பரம் சென்னையில் பிரபலமான மருத்துவர் ஆவார். இவர் பிரபல கர்நாடக இசை பாடகர். மேலும் இவர் மருத்துவ துறையிலும் இசை துறையிலும் பல்வேறு சாதனைகளுக்கு பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதேபோல் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் மருத்துவர் ஆவார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.