எந்த பெரிய ஹீரோவுக்கும் வராத துணிச்சல்.. ஜெயம் ரவி எடுத்த முடிவு.. காதலிக்க நேரமில்லை போஸ்டர்ல இத கவனிச்சீங்களா?

வணக்கம் சென்னை, காளி என இரண்டு படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இதில், பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரிஸூம் அடக்கம். கிருத்திகாவின் படங்களில் வணக்கம் சென்னை பலருக்கும் பேவரிட். நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானம் உள்ளவர் கிருத்திகா.

அதனால் தான் ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்கிறார். விஜய் ஆண்டனி நடித்த காளி படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கா விட்டாலும், மாறுபட்ட முயற்சி என்ற பெயரை கிருத்திகாவிற்கு பெற்று கொடுத்தது.

பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ்க்கு பிறகு கிருத்திகாவின் புதிய படங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. தற்போது தான் அவருடைய புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி, நித்யாமேனன் நடிக்கும் இந்தப்படத்தின் டைட்டில் காதலிக்க நேரமில்லை.

லால், யோகி பாபு, வினய் மேலும் பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

அகிலன் இறைவன் என இரண்டு படங்கள் சரியாக ஓடாத நிலையில் அடுத்து வரும் படங்கள் ஜெயம் ரவிக்கு கை கொடுக்க வேண்டும். தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரு ஜெயம் ரவி தற்போது கமலுடன் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். ஜீனி, தனி ஒருவன் பார்ட்-2 என கை வசம் பல படங்களை கொண்டிருக்கிறார்.

ஜெயம்ரவி, நித்யா மேனன் இணையும் முதல் படம் இதுவே. நடிப்பிலும் அழகிலும் ராட்சசி எனும் செல்லப்பெயரைக் கொண்டவர் நித்யாமேனன் . சாக்லேட் பாய் ஜெயம் ரவி மற்றும் நித்யாவின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

அதுவும் காதலிக்க நேரமில்லை என்ற டைட்டிலை மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1964 வெளியான முத்துராமன் நாகேஷ் நடித்த காதலிக்க நேரமில்லை சக்கை போடு போட்டது. அந்த படத்தை போல காமெடி கலாட்டாவாக இருக்குமா? அல்லது காதல் மட்டுமே பிரதானமாக இருக்குமா என்பதை பார்ப்போம்…!!

இன்று காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் காதல் ததும்பும் போஸ்க்கு இடையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் படத்தில் நித்யா மேனனின் பெயருக்கு பிறகு, ஜெயம் ரவியின் பெயர் இடம் பெற்றிருப்பது.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் பெயர்களுக்கு தான் முதல் இடம். ஹீரோயின்களுக்கு அடுத்த இடம் தான். அந்த வழக்கத்தை கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை படத்தில் மாற்றி இருக்கிறார்கள். முதலில் நித்யா மேனனின் பெயரும், அதன் பிறகு ஜெயம் ரவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தன்னுடைய இடத்தை ஹீரோயினுக்காக விட்டுக் கொடுத்த ஜெயம் ரவிக்கும் பெரிய மனசும் துணிச்சலும் கூட… மாற்றி சிந்தித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.