வெங்கட் பிரபுவை காணவில்லை!.. ரசிகரின் கேள்விக்கு அதிரடியாக கிச்சா சுதீப் அளித்த பதில்.. என்ன ஆச்சு?..

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் The Greatest Of All Time படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் ஒரு படமும், கிச்சா சுதீப்புடன் ஒரு படமும் இணைந்து பணியாற்றுவதாக இருந்த நிலையில் அந்த இரண்டு படங்களும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரனான கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. எப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், சிவகாசி, ஜி, மழை போன்ற சில படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கிரிக்கெட் மற்றும் நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. முதல் பட இயக்குநர் போன்றே இல்லை அனுபவமான இயக்குநர் போல் படத்தை இயக்கியுள்ளார் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றார். அதை தொடர்ந்து சரோஜா, கோவா என இளைஞர்களை கவரும் படங்களை இயக்கி வந்தார்.

விஜய் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு:

வெங்கட் பிரபுவின் கம்பேக்காக அமைந்த படம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா. இப்படத்ற்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் மங்காத்தா படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்தின் லீடையும் கொடுத்திருந்தார். மங்காத்தா ரீலிஸாகி பல ஆண்டுகளாகியும் அடுத்த பாகத்திற்கு எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

மங்காத்தா படத்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்த வெங்கட் பிரபு மீண்டும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் கைகொடுத்து தூக்கியது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிய அவர் தற்போது GOAT படத்தை இயக்கிவருகிறார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அஜித்தின் மங்காத்தா படத்திற்கு ஹிட் கொடுத்த அளவிற்கு விஜய்யின் GOAT படத்திற்கும் ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவை காணவில்லை:

இந்நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடிய சுதீப்பிடம் ரசிகர் ஒருவர், ”நீங்களும் வெங்கட் பிரபுவும் இணையும் படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கிச்சா சுதீப், ”வெங்கட் பிரபுவை காணவில்லை. அடுத்ததாக அனூப் பண்டாரியுடன் இணைந்து பணியாற்றும் திட்டம் இருக்கிறது” என கூறியது வைரலாகி வருகிறது. விஜய் படத்துக்கு சென்ற நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வெங்கட் பிரபு கழட்டி விட்டு விட்டார் என்றே கூறுகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.