Categories: சமையல்

குழந்தைகளுக்கு நல்ல எலும்பு வளர்ச்சி வேண்டுமா? கேழ்வரகு தோசை ரெசிபி!

கேழ்வரகு தானியத்தில் கால்சியம் சத்து நிறைய உள்ளது.100 கிராம் கேழ்வரகில் 344 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எனவே எலும்பு , பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சுவைக்கு ஏற்ப
மோர் – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு

சர்க்கரை நோயாளிக்கு சப்பாத்தி வேண்டாம் புதுசா கோதுமை இடியாப்பம் செய்யலாம்!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும், அதனுடன் மோர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் .

தோசை மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, நாம் பொதுவாக அரிசி மாவு தோசை செய்வது போல மெதுவாக தோசையை செய்து எடுக்கவும்.சத்தான சுவையான கேழ்வரகு மிளகு தோசை ரெடி.

Published by
Velmurugan

Recent Posts