”இந்தி தெரியாது போயா..!” வைரல் ஆகும் கீர்த்திசுரேஷின் ‘ரகு தாத்தா‘ டீசர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இந்தி மொழியை அனைத்திலும் கட்டயாமாக்கியது. இதனால் மற்ற மாநில மொழி பேசுவோர் போராட்டத்தில் குதித்தனர். மேலும் தமிழ்நாட்டில் இந்த போராட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அணிந்தும், இந்தி எதிர்ப்பு வசனங்களையும் தங்களது படங்களிலும், பொதுவெளிகளிலும் தங்களது எதிர்ப்பை பிரபலங்கள், அரசியல்வாதிகள் வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இதனை அடிப்படையாக வைத்தே ஒரு படம் உருவாகியிருக்கிறது. மாமன்னன் படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுமன் குமார் இப்படத்தினை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்க்கிங் படத்தில் வில்லத்தனமாக நடித்துப் பெயர் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் இப்படத்தில் கீர்த்திக்கு இந்தி எதிர்ப்பில் உதவும் தந்தையாக நடித்திருக்கிறார். மேலும் இதில் தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த டீசரில் புரோமோஷனுக்கு இந்தி தேர்வு தேர்ச்சி அவசியம் என்றால் அப்படிப்பட்ட புரோமோஷனே தேவையில்லை என்றும், இந்தி தெரியாது போயா என்ற போன்ற வசனங்களையும் கீர்த்தி சுரேஷ் சொல்வது போல் உருவாகியுள்ளது.

ரகு தாத்தா என்ற டைட்டிலானது கே. பாக்யராஜ் இயக்கி நடித்த இன்று போய் நாளை வா படத்தில் இடம்பெறும் வசனமாகும். இந்தப் படத்தில் பாக்யராஜின் நண்பர் இந்தி கற்றுக் கொள்ள டியூசன் மாஸ்டரை வீட்டிற்கு அழைத்து வந்து கற்கும் காட்சியில் இடம்பெற்றுள்ள வசனமாகும். அதில் இந்தி மாஸ்டர் ரகுதாத்தா எனச் சொல்ல அதற்கு அவர் ரகுதத்தா என அழைப்பார். இந்தக் காமெடி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

எனவே இந்தியை சரியாகக் கற்றுக் கொள்ள முடியாத அந்த கேரக்டரில் வரும் வசனத்தையே படத்தின் டைட்டிலாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காமெடி கலந்த படமாக உருவாகி வரும் ரகுதாத்தா படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.