வெற்றிமாறன், நயன்தாரா, கவின்.. அட என்னங்க காம்பினேஷனே புதுசா இருக்கே!..

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறனுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மினாட்சி சீரியல் மூலம் பிரபலமானார். அதில் வேட்டையன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவரின் நடிப்பு பெரும்பாலும் அனைத்து பெண் ரசிகர்களையும் ஈர்த்தது.

அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்ட அவர் சாண்டி ,லாஸ்லியா ஆகியோருடன் கூட்டணி அமைத்து அந்த சீசனையே கலகலப்பாக வைத்து கொண்டார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக கவின் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்றது அதிர்சியை ஏற்ப்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றார்.

நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கவின் அதை தொடர்ந்து லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்த பெற்றுள்ளார். மேலும் இரண்டு ஆண்டுகளாக படங்கள் நடிப்பதில் படு பிஸியாக இருந்து வருகிறார். தற்போது கிஸ், ஸ்டார் உள்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

சிவகார்திகேயனை தொடர்ந்து பல நடிகர்களை விஜய் டிவி உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில் கவினும் தற்போது கோலிவுட்டில் முன்னனி நடிகராக வளர்ந்து வருகிறார். டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினின் அடுத்து வரும் படத்திற்காக ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் முன்னனி இயக்குநரான வெற்றிமாறன் தற்போது விடுதலை பாகம் 2ல் பிஸியாக இருக்கிறார். அதை தொடர்ந்து அவர் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் வடசென்னை 2
உள்ளிட்ட படங்களையும் இயக்க உள்ளார். இந்நிலையில் தற்போது புதிய இயக்குநரான விக்ரமன் அசோகன் இயக்கத்தில் கவின் ஹீரோவான நடிக்க உள்ள படத்தை வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா கவினுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். நயன்தாராவின் அன்னப்பூரணி படத்தின் மீது பல சர்சைகள் எழும்பிய நிலையில் அவர் அதை சுமுகமாக மன்னிப்பு கேட்டு முடித்து வைத்தார்.

நயன்தாரா லீடு ரோலில் நடிப்பதால் கவினுக்கு எப்படியான ரோல் இருக்கும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. ஜெய்யை வீணடித்தது போல இருக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும் அந்த படத்தை தொடர்ந்து இன்னும் பல படங்கள் கவினுக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது வெற்றிமாறன், நயன்தாரா, கவின் காம்பினேஷனில் புதிய படம் உருவாகப் போவதாக கூறுகின்றனர். ஏற்கனவே விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் ஊர்க்குருவி எனும் படத்தில் கவின் கமிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...