அனைவருக்கும் பிடித்தமான கட்லா மீன் குழம்பு ரெசிப்பி!!

8771d070b11e95efefcb86bfb5996620

கட்லா மீன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையாகும். இதில் நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
கட்லா மீன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 10 
தக்காளி – 1/4 கிலோ 
புளி – எலுமிச்சை அளவு 
தனியா – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
சீரகம்- 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன் 
வெந்தயம்- 1/4 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு 

செய்முறை: 
1.    மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து காய்ந்த மிளகாய், தனியா மற்றும் சீரகத்தினை வறுத்து மைய பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3.    அரைத்த மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். 
5.    குழம்பு கொதித்த பின்னர், கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால் கட்லா மீன் குழம்பு ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.