ஹரிஹரனுக்கு இளையராஜா கொடுத்த கெளரவம் – ப்ளாஷ்பேக்!

இசைஞானி இளையராஜா எத்தனையோ பாடல்களை பாடியுள்ளார், இசையமைத்துள்ளார், பாடல்கள் எழுதியுள்ளார். மனோ, சித்ரா உள்ளிட்ட பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இளையராஜா படங்களின் பாடலில் எஸ்.பி.பி இல்லாமல் இருக்க மாட்டார். மனோ, சித்ரா, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் போன்றவர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.


மிகப்பெரும் இசை ஜாம்பவான்கள் எத்தனையோ பாடல்களை இளையராஜா இசையில் பாடி இருந்தாலும், ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் இவர்கள் ஒருவரே பாடியதில்லை. அத்தகைய வாய்ப்பு இளையராஜாவின் இசையில் ஹரிகரனுக்கே கிடைத்தது எனலாம்.

விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த காசி படத்திலேயே அப்படி ஒரு வியத்தகு நிகழ்வு நடைபெற்றது.

படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களையுமே ஹரிகரனே பாடி இருப்பது சிறப்பு. ஒரே ஒரு பாடலில் மட்டும் சுஜாதாவும் ஹரிகரனுடன் சேர்ந்து பாடி இருப்பார்.

பாடல்கள் எல்லாமே ஹிட் என்பதும் மிக சிறப்பான விசயம். இசைஞானி இளையராஜா இசை சம்பந்தமாக அவர் எடுக்கும் இது போல முடிவுகள் வெற்றியையே பெரும்பாலும் கொடுத்துள்ளன.

Published by
Staff

Recent Posts