தீபாவளி சரவெடியாய் இருக்கே!.. ஜப்பானுக்கு ஆப்படிக்க வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர்!

இதுவரை கார்த்தி படங்களுடன் மோதிய படங்கள் தான் பல்பு வாங்கி உள்ளன. அந்த அளவுக்கு நடிகர் கார்த்தி படங்களை கச்சிதமாக தேர்வு செய்து நடிப்பார். ஆனால், இந்த தீபாவளி ரேஸில் கார்த்தியின் ஜப்பான் படத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் முறியடிக்கும் என்றே தற்போது வெளியாகி உள்ள டிரெய்லர் உணர்த்துகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் ரிலீஸ்

பீட்சா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக ஜிகர்தண்டா அமைந்தது. கடைசி கிளைமாக்ஸில் கார்த்திக் சுப்புராஜ் வைத்த ட்விஸ்ட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் பேட்ட மட்டுமே தப்பித்தது. தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு சரவெடியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் இருக்கும் என தெரிகிறது.

கார்த்திக் சுப்புராஜ் கம்பேக்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் அந்த ட்ரைலரை வெளியிட்டார்.

கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைல் கேங்ஸ்டர் படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகியுள்ளது. எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் காட்சிக்கு காட்சிக்கு கலக்கி தங்களின் ஒட்டுமொத்த நடிப்புத் திறமையும் வெளிப்படுத்தியுள்ளனர். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன், பவா செல்லதுரை, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி இதயத்துக்கு தரமான படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் ட்ரெய்லர் கட் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் பல ஆண்டுகளாக சொதப்பி வரும் நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அவருக்கு கம்பேர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி 2 திரைப்படம் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தான் அவருக்கும் கைகொடுக்க வேண்டும். மார்க் ஆண்டனி படத்தையே மாஸ் ஹிட் படமாக மாற்றிய எஸ்.ஜே. சூர்யா இந்த படத்திலும் உள்ள நிலையில், அவரது வைப் படத்தை ஹிட் ஆக்கும் என தெரிகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...