துருவ் விக்ரமை தொடர்ந்து மீண்டும் வாரிசு நடிகரை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்.. யார் தெரியுமா?

இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கிய மூன்றே படங்களில் முன்னணி இயக்குநரானார். கடைசியாக சிறுவர்களை வைத்து வாழை படத்தை இயக்கியுள்ள அவர் அடுத்ததாக எந்த முன்னணி நடிகரை வைத்து அடுத்த படத்தை இயக்க போகிறார் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் பத்து வருடங்களாக இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதை தொடர்ந்து பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தில் சாதி பிரச்சனையை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டும் விதத்தில் எடுத்த அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
விதவிதமான கதை தளத்தை உருவாக்கி வரும் மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநர் வரிசையில் இடம் பிடித்து விட்டார். இவரின் படத்தில் நடிப்பதற்காக பலர் காத்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொறு படத்திலும் ஒவ்வொறு கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்கிறார்.

மாரி செல்வராஜின் அடுத்த படம்:

இவரது அடுத்து வரும் படத்தில் அவர் என்ன சொல்லவிருக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். முன்னதாக தனுஷின் கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தில் காவல் துறையினர்களின் அராஜகத்தை கதையாக உருவாக்கியிருந்தார். படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருந்தாலும் மாரி செல்வராஜுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் வடிவேலின் நடிப்பிற்கு பாராட்டுகள் வந்து குவிந்தது. அப்படத்தில் அரசியலில் தலைவராக இருந்தால் கூட சாதி வெறி பிடித்த மிருகங்களிடம் அந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீதான கண்ணோட்டம் மாறாது என உருக்கமாக எடுத்திருந்தார். இப்படி எடுத்த மூன்று படங்களுமே ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பினை பெற்றது.

Japan

அதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் சிறுவர்களை வைத்து வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், அவர் கர்ணன் படத்தை அடுத்து துருவ் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக இருந்த நிலையில் உதயநிதி படத்தில் கமிட் ஆனதால் அப்படம் தள்ளிவைக்கப்பட்டது. ஒரு கபடி வீரரை பற்றிய கதையாக இப்படம் உருவாக உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துருவ் விக்ரமின் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து மாரி செல்வராஜ் படம் இயக்க போவதாக தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடதக்கது. மேலும் மாரி செல்வராஜ் கார்த்தியை அடுத்து தனுஷையும் வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...