கன்னி தெய்வம் என்பது யார்

யாராவது ஒரு குடுகுடுப்பை அடிப்பவரோ, இல்லை குறி சொல்பவரோ பொதுவாக யாரையும் பார்த்த உடன் சொல்லும் வார்த்தை உங்க வீட்ல உள்ள கன்னி தெய்வம் உங்களை காக்கிறது என்ற வார்த்தையைத்தான். ஆம் ஒவ்வொரு வீட்டிலும் பல தலைமுறைக்கு முன்னர் யாராவது ஒரு பெண் இறந்தி இருக்கலாம். அவர்கள் திருமணமாகமலோ, சின்ன குழந்தையிலோ இறந்திருந்தால் ஒவ்வொரு வீட்டிலும் கன்னி தெய்வமாய் இருந்து காக்கிறார்கள் என அர்த்தம்.

இவர்கள்தான் அந்த வீட்டில் இருந்துகொண்டு அந்த வீட்டுக்கு வரும் பெருமளவு கெடுதல்களை குறைப்பவர்கள் என்றால் மிகையாகாது. இவர்களை உரியமுறையில் பவுர்ணமி தினம் அன்று வணங்கினால் சிறப்பு.

உங்கள் வீட்டிற்கு தீங்கு நேராமல் இருக்கும் அந்த கன்னி தெய்வத்தை வீட்டில் சின்ன பட்டுத்துணியை ஸ்க்ரீன் போல செய்து பூஜை அறையில் மாட்டி பவுர்ணமி நாட்களில் அதற்கு ஏதாவது தூபதீபம் காட்டி ஏதாவது பட்சணங்கள் படைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும் வழிபட்டால் சிறப்பு.

Published by
Staff

Recent Posts