ஜோதிடம்

கன்னி ஆனி மாத ராசி பலன் 2023!

கன்னி ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் இட அமர்வு செய்துள்ளார். பெரிய அளவிலான ராஜ யோகம் அடிக்கும் மாதமாக ஆனி மாதம் இருக்கும். திடீர் பண வரவால் நீங்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடுவீர்கள்.

எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத் தொந்தரவுகள் படிப்படியாகக் குறையும். மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி ரீதியாக எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குழந்தை பாக்கியத்துக்குக் காத்திருப்போருக்கு நிச்சயம் நற் செய்தி கிடைக்கப் பெறும். எடுக்கும் முயற்சிகளில் உடனடி வெற்றி கிடைக்காவிட்டாலும் காலம் தாமதித்து வெற்றியினைக் கொடுப்பதாய் இருக்கும்.

குல தெய்வக் கோவிலுக்குச் சென்று அன்னதானம் செய்யுங்கள். பணவரவுரீதியாக மன நிறைவுடன் இருப்பீர்கள். மேலும் குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர்.

திருமண காரியங்களில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும்; பொறுத்திருந்து எந்தவொரு முடிவினையும் எடுங்கள். மேலும் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகக் கவனம் தேவை. இரவு நேரப் பயணத்தினை முடிந்தளவு தவிர்க்கவும்.

தந்தையின் உடல் நலன் ரீதியாக வீண் விரயச் செலவுகள் ஏற்படும்; தாய்வழி உறவினர்களால் ஆதாயப் பலன்கள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

Published by
Gayathri A

Recent Posts