திருமணத்தின் போது ஏற்பட்ட பீரியட்ஸ்!.. கோவிலில் தைரியமாக மணமேடை ஏற்றி விடும் அம்மா.. கண்ணகி சீன் இதோ!

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மயில்சாமி, மெளனிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் முதல் போஸ்டரே நடிகை கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருப்பதும் அவரது தொப்புள் கொடிக்கு யாரோ ஒருவர் தீ வைப்பது போன்ற பகிரக் கிளப்பும் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், கணவர் அசோக் செல்வனின் சபா நாயகன் படத்துடன் போட்டியாக கீர்த்தி பாண்டியனின் கண்ணகி திரைப்படமும் வெளியாகிறது.

கண்ணகி படத்தின் செம சீன்:

படத்தின் புரமோஷனுக்காக தற்போது அந்த படத்தில் இருந்து அம்மு அபிராமியின் திருமண போர்ஷன் வெளியாகியுள்ளது. புரட்சிகரமான கருத்துக்களுடன் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டி இருக்கும் இயக்குனர் சில அநீதிகளையும் களைய முயற்சித்திருக்கிறார்.

கருவை சுமக்கும் பெண்கள் மாதத்தில் மூன்று நாள் அவதிக்குள்ளாகும் மாதவிடாய் பிரச்சனையை தீட்டு என சொல்லி பல காலமாக பெண்களை ஒதுக்கி வைத்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லிவிட்டு விளையாட்டுத் துறையில் இருந்து பல்வேறு துறைகளிலும் சேஃப்டி நாப்கின்களை அணிந்து கொண்டு பெண்கள் தங்களது வேலைகளையும் சாதனைகளையும் புரிந்து வருகின்றனர்.

இதெல்லாம் தீட்டு கிடையாது

கோயிலில் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று மாப்பிள்ளை அக்னி முன்பாக அமர்ந்திருக்கும் போது அம்மு அபிராமிக்கு பீரியட்ஸ் ஏற்பட்டு விடுகிறது. அந்த விஷயத்தை தனது தாய் மௌனிகாவிடம் சொல்ல அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது, யாருக்கும் தெரியாமல் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற முயற்சியுடன் அவர் செய்யும் செயல்கள் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.

மேலும், மணவறைக்கு வந்துவிட்ட அம்மு அபிராமி என் கூடவே இருமா என சொல்லும்போது கணவரை இழந்து வாடும் மௌனிகா நான் எல்லாம் இங்கே இருக்க கூடாது என நகரும் இடம் மேலும் வலியை தருகிறது.

இந்த வாரம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உரியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபைட் கிளப், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள சபாநாயகன் உள்ளிட்ட படங்களுடன் பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள கண்ணகி திரைப்படம் போட்டி போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.