அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?

கவிஞர் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும் அப்படி ஓர் உறவு. தமிழ்த்தாய் பெற்ற எண்ணற்ற கவிஞர்களில் கண்ணதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தமிழ் துள்ளி விளையாடும். சோகங்களில் கண்ணீர் வடிக்கும், தாலாட்டாய் எழுதும் போது அமைதியாகத் தூங்கும், புரட்சியில் வெடிக்கும். இப்படித் தன் பேனா முனையால் தமிழை வளர்த்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு.

தனது அபார நடிப்புத் திறனாலும், கண்ணதாசன் பாடல்களாலும் மூலை முடுக்கெல்லாம் ஹிட் ஆன இருபெரும் துருவங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி. இவர்கள் இருவரையும் பாடல்கள் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்க வைத்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. மெட்டுக்குப் பாட்டு என்ற நிலை இல்லாது பாட்டுக்கு மெட்டு என்ற முறையைக் கடைபிடித்து வந்தவர்.

இவரின் வைர வரிகளில் உருவான ஒரு பாடலுக்கு இப்படி ஓர் அர்த்தம் உள்ளதா என வியக்கத் தோன்றும் அளவிற்கு அழகுத் தமிழில் தனது சொற்களால் விளையாடி இருப்பார் கண்ணதாசன். அந்தப் பாடல்தான் நீரோடும் வைகையிலே..

எதிர்நீச்சல் நாயகிகளுக்கு ஒருநாள் சம்பளம் இவ்ளோவா? சத்தம் இல்லாமல் Top-ல் இருக்கும் ஈஸ்வரி

சிவாஜி நடிப்பில் வெளியான பார் மகளே பார் என்ற படத்தில் வரும் நீரோடும் வைகையிலே என்ற பாடல், பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த பாடலின் மூலம் கண்ணதாசன் என்ன சொல்ல வருகிறார், அடுத்த வரியான நெய்யூறும் கானகத்தில் என்ற வரியில்  கானகத்தில் எப்படி நெய் ஊறும் என்பது போன்ற பல கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை.

கதைப்படி, சிவாஜி, சவுக்காரி ஜானகி குழந்தைக்கு, கணவன் மனைவி இருவரும் இணைந்து தாலாட்டு பாடுவது தான் இந்த பாடல், ’நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் காணகத்தில் கைகாட்டும் மானே..’ என்று தொடங்கும் இந்த பாடலில், கதைக்களம் மதுரையில் நடப்பதால், நீரோடும் வைகை என்பது சரியாக இருக்கிறது.

அதே சமயம் நெய்யூறும் காணகத்தில் கைக்காட்டும் மானே என்றால் என்ன பொருள் என்பது பலருக்கும் சந்தேகம். இதில் நெய் என்றால் வளமையை குறிக்கும் சொல். அப்படி பார்த்தால் நெய்யூறும் கானகம் என்ற சொல்லுக்கு, வளமை மிகுந்த காட்டில் இருந்து கை காட்டும் மானே என்பது பொருள் என்று, ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழை நமது கவிஞர்கள் எப்படியெல்லாம் வளர்த்துள்ளார்கள் என்பதற்கு கண்ணதாசன் பாடல்கள் நல்லதொரு உதாரணமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...