எதிர்நீச்சல் நாயகிகளுக்கு ஒருநாள் சம்பளம் இவ்ளோவா? சத்தம் இல்லாமல் Top-ல் இருக்கும் ஈஸ்வரி

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சீரியைலை 2k கிட்ஸ் முதற்கொண்டு பார்த்து இரசிக்கின்றனர் என்றால் அது எதிர்நீச்சல் சீரியலாக்கத்தான் இருக்கும். சன்டிவியில் தினந்தோறும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். அதிலும் குறிப்பாக ஆதிகுணசேகரனாக நடிப்பில் வெளுத்து வாங்கிய மாரிமுத்துவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகியது. இவரின் மேனரிசத்திற்கும், டைமிங் டயலாக்குகளும் மீம்ஸ்களிலும், சோஷியல் மீடியாவிலும் வைரலாக இருந்து வருகிறது.

ஆனால் எதிர்பாரா விதமாக மாரிமுத்து திடீரென மாரடைப்பால் இறந்து விட எதிர்நீச்சல் சீரியல் அந்த இடத்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்தது. மேலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து சரசரவென இறங்கியது. இதனால் எதிர்நீச்சல் அடிக்க முடியாமல் இயக்குநர் திருச்செல்வம் தடுமாறிய நிலையில் வேல.ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு மெல்ல மெல்ல தற்போது தத்தித்தடுமாறி டி.ஆர்.பி-யில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதில் வரும் நாயகிகளின் கேரக்டர்களைப் போலவே ஒவ்வொரு இல்லங்களிலும் பெண்கள் உள்ளதால் சும்மாவே சீரியலுக்கு அடிமையாகும் பெண்கள் கூட்டம் இந்த சீரியலை பெரிதும் விரும்ப ஆரம்பித்து விட்டனர். இதுவே இந்த சீரியலுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது.

ஒரு போஸ்டர் கூட இல்ல.. ஆனாலும் உலக சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்

தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கதையின் நாயகியாக வரும் ஜனனிக்கு (மதுமிதா) தினசரி ரூ.12,000 வழங்கப்படுகிறது. முன்னனி ஹீரோயினான ஈஸ்வரி (கனிகா) ரூ.12,000 பெற்று வருகிறார். இதனையடுத்து அடுத்த லெவலில் உள்ள நடிகைகளான ரேணுகா (பிரியதர்ஷினி), நந்தினி (ஹரிப்பிரியா) ஆகியோர் ரூ.10, 000ஊதியமாகப் பெறுகின்றனர். மேலும் மூத்த நடிகையான சத்யப்பிரியா ரூ.8000 பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த சீரியலில் பல்வேறு புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கதிர் அண்ணன் ஆதி குணசேகரனை எதிர்த்து திருந்தி வாழ்வது, ஆதி குணசேகரன் மகளான தர்ஷினியை கடத்தி பின் அவர் தப்பித்து ஓடுவது போன்ற எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்து சீரியலுக்கு மீண்டும் அதே விறுவிறுப்பைக் கொண்டு வந்துள்ளதால் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். மேலும் இதில் ஜான்சிராணி, கரிகாலன் போன்ற கதாபாத்திரங்களும் சீரியலுக்கு அவ்வப்போது சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.